Bright Zoom Today News ஏப்ரல் 22 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஏப்ரல் 22 காலை நேரச் செய்திகள்

மே 31ஆம் தேதி வரை நீட்டிப்பு
- முக்கியச் செய்திகள் !

உலகச் செய்திகள்
சுகாதார நிறுவனம் எச்சரிக்கை :

கொரோனா கட்டுப்பாடுகளை அவசரப்பட்டு தளர்த்தினால் அது மீண்டும் அதிக வீரியத்துடன் பரவும் நிலை ஏற்படும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மருந்து கண்டுபிடிக்க முயற்சி :

உலகின் பல்வேறு நாடுகளில் 600க்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வுக்கூடங்களில் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரம் அடைந்துள்ளன.
மாநிலச் செய்திகள்
நேற்று முதல் :

தமிழகத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிதியானது, அவர்களது வங்கிக் கணக்குகளில் நேற்று முதல் அளிக்கப்பட்டு வருகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு அதிரடி :

வாடகை வீட்டில் வசிக்கும் சுகாதார பணியாளர்களை காலி செய்யுமாறு நிர்பந்திக்கக்கூடாது என தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

மே 31ஆம் தேதி வரை :

விவசாயக் கடனுக்கான வட்டி மானியத்தை மே 31ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

இன்று ஆலோசனை :

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ குழுவினருடன் இன்று முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

மத்திய அரசு வலியுறுத்தல் :

வரும் வியாழக்கிழமை முதல் தொடங்க உள்ள ரம்ஜான் மாத நோன்பு நிகழ்வின்போது மசூதிகளில் தொழுகைக்கூட்டம் நடத்தாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

உத்தரவு பிறப்பிப்பு :

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதியப் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் முறை இல்லாமல் பழைய வழிமுறையிலேயே ஊதியப் பட்டியலை தயாரித்து அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரக் குழுக்கள் ஆய்வு :

ஹாட்ஸ்பாட் எனப்படும் கொரோனா பரவல் அதிகமுள்ள பகுதிகளில் மத்திய சுகாதாரக் குழுக்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.

அமைச்சரவை ஆலோசனை கூட்டம் :

கொரோனா குறித்து விவாதிக்க, பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாவட்டச் செய்திகள்
காவல்துறைக்கு உத்தரவு :

சென்னையில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தடையை மீறுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

  அதிரடி அறிவிப்பு :

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் சமூக விலகலை 100 சதவீதம் கடைபிடிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் காய்கறி, இறைச்சிக்கடைகள் மூடப்படும் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்
உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு :

ஐரோப்பிய நாடான பெலராசில் வழக்கம் போல பிரிமியர் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. தற்போது நடக்கும் ஒரே கால்பந்து தொடர் என்பதால் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Bright Zoom Today News ஏப்ரல் 22 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஏப்ரல் 22 காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on April 22, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.