Bright Zoom Today
உலக வரலாற்றில் (22-4-20) இன்று
உலக புவி தினம்
சிந்திப்போம்..
பூமியின் வளங்களை பாதுகாப்போம்.. இன்று உலக புவி தினம்..!!
சாதனையாளர்கள் இவ்வுலகை விட்டு சென்றாலும், அவர்கள் செய்த மாபெரும் சாதனைகளையும்,
உலக புவி தினம்
🌍 புவியின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, புவி மாசடைவதை தடுக்கும் நோக்கத்தோடு அனைத்து நாடுகளிலும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
🌍 பூமிக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை உலக மக்கள் உணர வேண்டும் என கேலார்டு நெல்சன் என்கிற அமெரிக்கர் கருதினார். எனவே அவர் ஊர்வலம், பொதுக்கூட்டம், தர்ணா போன்றவற்றை மாணவர்களை கொண்டு நடத்தி வந்தார்.
🌍 1970ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி புவியைப் பாதுகாக்க 2 கோடி பேர் கலந்துக்கொண்ட பேரணியை நடத்தினார். இதுவே, உலக புவி தினமாக மாறி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
விளாதிமிர் லெனின்
👉 'லெனின்" என்ற பெயரிலேயே உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட விளாதிமிர் லெனின் 1870ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி ரஷ்யாவில் உள்ள சிம்பிர்ஸ்க் என்ற நகரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் விளாடிமிர் இலீச் உல்யானவ்.
👉 இவர் மக்களுக்காக, கொடுங்கோலாட்சி நடத்திக் கொண்டிருந்த ஜார் மன்னனுக்கு எதிராக போராடத் தீர்மானித்தார். மேலும் தொழிலாளர்களுக்காக தொழிலாளர் விடுதலை இயக்கம் என்பதை தொடங்கினார்.
👉 1917ஆம் ஆண்டு மக்களால் புரட்சி நிகழ்த்தப்பட்டு ரஷ்யாவில் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
👉 ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த லெனின் தனது 53ம் வயதில் (1924) மறைந்தார். இவருடைய உடல் பதப்படுத்தப்பட்ட நிலையில் ரஷ்யாவில் உள்ள செஞ்சதுக்கத்தில் பாதுகாக்கப்பட்டது. இவ்விடத்திற்கு லெனின் மாஸோலியம் என்று பெயர்.
மோன்டால்சினி
💉 மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற பிரபல நரம்பியலாளர் ரீட்டா லெவி மோன்டால்சினி (சுவைய டுநஎi ஆழவெயடஉini) 1909ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார்.
💉 இத்தாலி அரசு 1938ஆம் ஆண்டு யூதர்களுக்கு மருத்துவத்தில் தடைவிதித்தது. இதனால், இவர் தனது அறையிலேயே ஒரு சோதனைக்கூடம் அமைத்து ஆராய்ச்சி செய்து வந்தார்.
💉 நரம்பு செல்களின் வளர்ச்சியை தூண்டும் புரோட்டீன்கள் குறித்த இவரது ஆராய்ச்சி புற்றுநோய், அல்சீமர், மலட்டுத்தன்மை சிகிச்சை முறைகளைக் கண்டறிய வழிவகுத்தன.
💉 இவருக்கு நரம்பு வளர்ச்சி காரணிகள் குறித்த கண்டுபிடிப்புக்காக 1986ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
💉 இவருக்கு ஆராய்ச்சி செய்யவும், தொழில் செய்யவும் தடை விதித்த அதே இத்தாலி அரசிடம், 'நாட்டின் உயர்ந்த ஆராய்ச்சியாளர்" என்ற பட்டத்தை பெற்ற ரீட்டா லெவி மோன்டால்சினி 2012ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
✍ 1962ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயமோகன் பிறந்தார்.
Bright Zoom Today உலக வரலாற்றில் (22-4-20) இன்று உலக புவி தினம்
Reviewed by Bright Zoom
on
April 22, 2020
Rating:
No comments: