Bright Zoom Today News ஏப்ரல் 25 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஏப்ரல் 25 காலை நேரச் செய்திகள்

மக்களின் வீடுகளுக்கே சென்று.. விநியோகிக்கும் பணி தொடங்கியது.. - செய்திகள்..!!

உலகச் செய்திகள்
அடுத்த வாரம் முதல் மின்னணு காப்பு :

தென்கொரியாவில் கடந்த 1ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து வருவோர் அனைவரையும் கட்டாயமாக 14 நாட்கள் தனிமையில் இருக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் சிலர் வெளியே சுற்றுவதை தடுக்க அவர்களுக்கு அடுத்த வாரம் முதல் மின்னணு காப்பு மாட்டப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
இன்று காலை 11 மணிக்கு... :

மத்திய அரசு அதிகாரி திருப்புகழ் தலைமையில் மத்திய குழுவினர் தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலருடன் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

தமிழக அரசு தெரிவிப்பு :

ஊரடங்கு இருப்பதால் மக்களின் வீடுகளுக்கே ஜோமோட்டோ, டன்சோ நிறுவனங்கள் மூலம் ஆவின் பால் மற்றும் வெண்ணெய், நெய், பால்கோவா போன்ற பால் உபபொருட்கள் விநியோகிக்கும் பணி தொடங்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு :

தமிழகத்தில் கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் வெப்பசலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரூ.15-க்கு சாப்பாடு விற்பனை :

மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் விதமாக தெற்கு ரயில்வே சார்பில் செங்கல்பட்டு, காட்பாடி, திருச்சி, மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி. உணவகங்களில் ரூ.15-க்கு சாப்பாடு விற்பனை செய்யப்படவுள்ளது.

திறன் வளர்ப்பு படிப்பு - விண்ணப்பிக்கலாம் :

திறன் வளர்ப்பு படிப்புகளை வரும் கல்வி ஆண்டில் தொடங்க விருப்பமுள்ள கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கான நிதியை வழங்கத் தயாராக உள்ளதாகவும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.

புனித ரம்ஜான் மாதம் :

புனித ரம்ஜான் மாதம் சனிக்கிழமை (இன்று) தொடங்குவதை முன்னிட்டு குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இன்று முதல்... :

கர்நாடகா மாநிலத்தில் இன்று முதல் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையை தொடங்கலாம் என மருத்துவக்கல்வி அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
4 நாட்கள் விடுமுறை :

கொரோனாவை கட்டுபடுத்த நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதால் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கோயம்பேடு காய்கறிச் சந்தை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

முழு ஊரடங்கு அமல் :

நெல்லையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படவுள்ளது. இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் நகரசபை பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்
அட்டவணையை மாற்ற மாட்டோம் :

ஐ.பி.எல் லீக்குக்காக ஆசிய கோப்பை போட்டி அட்டவணையை மாற்ற சம்மதிக்க மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

Bright Zoom Today News ஏப்ரல் 25 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஏப்ரல் 25 காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on April 25, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.