இயற்கை கொடுத்த அற்புத கொடைகளுள் ஒன்று இளநீர்
இயற்கை நமக்கு கொடுத்த வரப்பிரசாதம்... எண்ணற்ற பலன்களை வாரி வழங்கும் இளநீர்...!
இளநீர் தரும் பயன்கள்..!!
இயற்கை கொடுத்த அற்புத கொடைகளுள் ஒன்று இளநீர். இளநீர், வெயிலுக்கு மிகச்சிறந்த பானம். இளநீரில் எண்ணற்ற மருத்துவ பயன்கள் அடங்கியுள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு சிறந்த பானம் இதுவாகும்.
இளநீரில் இருக்கும் சத்துக்கள் :
பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்திற்கு இணையானது. மந்தம், உணவு செரிமானம் போன்றவற்றிற்கு இது மருந்து மற்றும் சிறந்த உணவு ஆகும்.
இளநீரை எந்த நேரத்தில் குடித்தால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்?
வெறும் வயிற்றில் குடித்தால் :
தினமும் காலை வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால், அதில் இருக்கும் லாரிக் அமிலம், நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் எடை குறைவு பிரச்சனையிலிருந்து விடுபடுதல் போன்ற பலன்களை தருகிறது.
உடற்பயிற்சி :
உடற்பயிற்சி செய்பவர்கள், உடற்பயிற்சிக்கு முன்போ அல்லது பின்போ இளநீரை குடிக்கலாம். இதனால், உடற்பயிற்சி செய்வதன் பலனை அதிகரிக்கச் செய்கிறது.
மதிய உணவு :
மதிய உணவுக்கு முன்போ அல்லது பின்போ இளநீர் குடிப்பதால், உடல்சூடு தணிக்கப்படுகிறது. மேலும், செரிமான சிக்கலை உடனடியாக சரிசெய்யும் சக்தி இளநீருக்கு உண்டு.
இரவு :
இரவில் படுக்கைக்கு செல்லும் முன் இளநீர் குடிப்பது நல்லது. ஏனெனில், இரவில் இனிமையான உறக்கத்தை பெறுவதற்கும் இளநீர் முக்கிய காரணியாக செயல்படுகிறது. நமது இதயத்துடிப்பை சீராக இருக்கச் செய்கிறது.
இளநீர் தரும் பயன்கள் :
இளநீர் குடித்தால் ரத்தம் சுத்தமடைவதோடு மட்டுமல்லாமல், கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது.
பெண்களுக்கு மாதவிலக்கின்போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கு இளநீர் சிறந்த மருந்து.
பேதி, சீதபேதி, ரத்தபேதி ஆகும்போது பிற உணவுகளை தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது.
சிறுநீரகக்கல், சிறுநீர்க்குழாய் பாதிப்பு போன்ற கோளாறுகள் வந்துவிட்டால் அருமருந்தே இளநீர்தான்.
டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது இளநீரை தாராளமாக குடிக்க வேண்டும்.
இளநீர், வயிறு மற்றும் குடல் தொடர்பான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். வயிற்றுப் பொருமல், உப்புசம், குமட்டல், பசியின்மை ஆகியவற்றை சரிபடுத்தும்.
சருமத்தின் ஈரப்பதத்தை நீண்ட நேரத்திற்கு தக்கவைத்து, சருமத்தை பாதுகாக்கும்.
இளநீரில் சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதனாலும், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுவதாலும், சர்க்கரை நோயாளிகள் இளநீர் பருகுவது நல்லது.
இளநீரில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அடங்கியிருப்பதால், வைரஸ் தாக்குதலுக்கு நல்ல மருந்தாக அமைகிறது.
இளநீரில் சுண்ணாம்புச்சத்து நிறைந்திருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கும், உறுதிக்கும் உதவுகிறது.

இயற்கை கொடுத்த அற்புத கொடைகளுள் ஒன்று இளநீர்.
Reviewed by Bright Zoom
on
May 12, 2020
Rating:
Reviewed by Bright Zoom
on
May 12, 2020
Rating:

No comments: