Bright Zoom News மே 12 மாலை நேரச் செய்திகள்

Bright Zoom News
மே 12 மாலை நேரச் செய்திகள்


பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு.. இன்று இரவு 8 மணிக்கு உரை - மாலைச் செய்திகள்..!!


உலகச் செய்திகள்
அமெரிக்க அதிபர் திட்டவட்டம் :

சீனாவுடன் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தைகளை துவங்க தமக்கு விருப்பம் இல்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மாநிலச் செய்திகள்
இன்று இரவு 8 மணிக்கு... :

நாடு தழுவிய ஊரடங்கு மே 17ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றவுள்ளார். மே 17ஆம் தேதிக்கு பிறகு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுத்தேர்வு அட்டவணை :

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 1ஆம் தேதி மொழிப்பாட தேர்வும், ஜூன் 3ஆம் தேதி ஆங்கிலத் தேர்வும், ஜூன் 5ஆம் தேதி கணிதத் தேர்வும், ஜூன் 6ஆம் தேதி விருப்ப மொழிப்பாடத் தேர்வும், ஜூன் 8ஆம் தேதி அறிவியல் தேர்வும், ஜூன் 10ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வும், ஜூன் 12ஆம் தேதி தொழிற்பிரிவு தேர்வும் நடைபெறுகிறது.

பிரதமர் உத்தரவு :

கூடுதலாக வெளிநாடுகளுக்கு உதவிகளை வழங்க வெளியுறவுத்துறைக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதற்காக ரூ.100 கோடியில் மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை தயாரித்துள்ளது.

பாஸ் தேவை இல்லை :

மாநிலத்திற்குள் பயணம் செய்ய லாக்டவுன் பாஸ் தேவை இல்லை என ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

முதலமைச்சர் அறிவுறுத்தல் :

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விஷ வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இரவு நேரத்தில் தங்க, அமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஜெகன்மோகன் அறிவுறுத்தியுள்ளார்.

பணம் திரும்ப வழங்கப்பட்டது :

திருப்பதி கோவிலில் பல்வேறு சேவைகளில் பங்கேற்க முன்பதிவு செய்த பக்தர்களில் 90 சதவீதம் பேருக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டது.

ஆந்திரா அதிரடி முயற்சி :

ஆந்திரப்பிரதேச மாநில போக்குவரத்துக் கழகம், பேருந்துகளில் இருக்கக்கூடிய இருக்கைகளின் வடிவமைப்பை முற்றிலும் மாற்றி மூன்று வரிசைகள் கொண்ட இருக்கையாக அமைத்துள்ளது.

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு :

தமிழகத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்காலிகமாக மூடல் :

டெல்லியில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் தலைமையகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

மாவட்டச் செய்திகள்
ஸ்டாலின் வலியுறுத்தல் :

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

நிவாரண உதவி அறிவிப்பு :

கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் நடந்த வடமாநில தொழிலாளர்களின் போராட்டத்தில் காயமடைந்த காவலர்களுக்கு நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்
டுவிட்டரில் பதிவு :

ராஞ்சியில் உள்ள பண்ணை வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செவழித்து வரும் எம்.எஸ்.டோனி, செல்ல நாயுடன் விளையாடும் வீடியோவை சிஎஸ்கே டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.


Bright Zoom News மே 12 மாலை நேரச் செய்திகள் Bright Zoom News  மே 12 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on May 12, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.