Bright Zoom CBSE News(16-5-2020) சி.பி.எஸ்.இ. 10,12-ம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணை வரும் 18-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு

Bright Zoom CBSE News(16-5-2020)
சி.பி.எஸ்.இ. 10,12-ம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணை வரும்
18-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு


டெல்லி: சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணை வரும் 18-ம் தேதி வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு வெளிப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே விடுபட்ட பொதுத் தேர்வுகள் ஊரடங்கு முடிவடைந்த பின்னா் நாடு முழுவதும் வரும் ஜூலை 1-ஆம் முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுகள் கடந்த பிப். 24-ஆம் தேதி தொடங்கி ஏப். 14-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

கொரோனா பாதிப்பு தீவிரமான நிலையில் பொதுமுடக்கம் உத்தரவுக்குப் பின்பு பொதுத்தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தற்போது தொடா்ச்சியாக மே 17-ஆம் தேதி வரை ஏற்கெனவே பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தோ்வுகள் ரத்து, புதிய அட்டவணை வெளியீடு என பொதுத் தோ்வுகள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியீடு என பல்வேறு வதந்திகள் பரவின. அப்போது சிபிஎஸ்இ நிா்வாகம் சாா்பில் உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன. அதேபோன்று பொதுத்தோ்வுக்கான அறிவிப்பு சிபிஎஸ்இ அதிகாரப்பூா்வ இணையதளத்தில் மட்டுமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. முன்னதாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவா்கள் தோ்வின்றி தோ்ச்சி செய்யப்படுவாா்கள்.

9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவா்கள் பருவத்தோ்வு, பயிற்சித்தோ்வு, செய்முறைத்தோ்வு ஆகியவற்றில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தோ்ச்சி முடிவு செய்யப்படும் எனவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்திருந்தது. இந்தநிலையில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கு எஞ்சியுள்ள பொதுத்தோ்வுகளுக்கான அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணை வரும் 18-ம் தேதி வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

Tags : announcement ,CBSE , CBSE 10,12th Class Examination, Timetable

Bright Zoom CBSE News(16-5-2020) சி.பி.எஸ்.இ. 10,12-ம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணை வரும் 18-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு Bright Zoom CBSE News(16-5-2020)  சி.பி.எஸ்.இ. 10,12-ம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணை வரும்  18-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு Reviewed by Bright Zoom on May 16, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.