Bright Zoom Today News
மே 16 மாலை நேரச் செய்திகள்
முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. மாவட்ட ஆட்சியர்களுக்கு.. தமிழக அரசு உத்தரவு - செய்திகள் !
உலகச் செய்திகள்
பயங்கர தீ விபத்து :
இங்கிலாந்து தலைநகர் லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள தொழில்துறை எஸ்டேட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
அதிபர் டிரம்ப் அறிவிப்புக்கு நன்றி :
இந்தியாவிற்கு வென்டிலேட்டர்கள் நன்கொடையாக அளிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்த நடவடிக்கை இரு நாட்டு உறவுக்கு மேலும் வலு சேர்க்கும் என குறிப்பிட்டுள்ளார்.
மாநிலச் செய்திகள்
பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை :
ஆசிரியர்கள் எங்கிருந்தாலும் பணிபுரியும் பள்ளி சார்ந்த மாவட்டத்திற்கு வரும் 21ஆம் தேதிக்குள் வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு :
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சர் வேண்டுகோள் :
பயணச் செலவுகளை தமிழக அரசே ஏற்றுக்கொண்டு, வெளிமாநிலத் தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் என்பதால், தன்னிச்சையாக நடைபயணமாகவோ, பிறவாகனங்களின் மூலமாகவோ, செல்ல வேண்டாம் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழக அரசு ரூ.2000 நிதி உதவி :
முடித்திருத்துவோர் நல வாரியங்களில் உறுப்பினர்களாக அல்லாதவர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.2000 வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகம் அழைத்து வர ஏற்பாடு :
பொதுத்தேர்வு எழுத, சிறப்பு பாஸ் வழங்கி வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களை தமிழகம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்கள் இதற்கான பணியில் ஈடுபட உள்ளனர்.
முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் :
ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதார திட்டங்களில் இன்று நான்காவது நாளாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு :
வட தமிழகத்தில் இன்று முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
தனி ரயில் மூலம் பயணம் :
தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து தனி ரயில் மூலம் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 1,400 பேர் பீகார் மாநிலத்திற்குப் பயணம் மேற்கொண்டனர்.
உச்சத்தில் தங்கம் விலை :
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து ரூ.36,368க்கு விற்பனையாகிறது.
விளையாட்டுச் செய்திகள்
பெடரரை மிஞ்சுவேன் - ஜோகோவிச் நம்பிக்கை :
ஓய்வு பெறுவதற்குள் பெடரர், நடாலின் சாதனையை முறியடித்து அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர் என்ற சிறப்பை எட்ட முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக ஜோகாவிச் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கை கோரிக்கை :
3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரை ரத்து செய்ய வேண்டாம் என இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

Bright Zoom Today News மே 16 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
May 16, 2020
Rating:
Reviewed by Bright Zoom
on
May 16, 2020
Rating:

No comments: