Bright Zoom News
மே 13 காலை நேரச் செய்திகள்


பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு.. பேருந்து வசதி - முக்கியச் செய்திகள்..!!

உலகச் செய்திகள்
வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது :

இணையதள சேவை மற்றும் விண்வெளி ஆய்வு ஆகியவற்றுக்கான இரு செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

40 நாட்களுக்கு பின் :

சிங்கப்பூரில் ஏறத்தாழ 40 நாட்களுக்கு பின் முடிதிருத்தும் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், ஏராளமானோர், நீண்ட வரிசைகளில் தனிநபர் இடைவெளி கடைபிடித்து காத்திருந்தனர்.

மாநிலச் செய்திகள்
இன்று ஆலோசனை... :

ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்த நிலையில், இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அனைவருக்கும் பேருந்து வசதி... :

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அனைவருக்கும் பேருந்து வசதி செய்து தரப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சிறப்பு நிதி தொகுப்பு திட்டம் :

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க 20 லட்சம் கோடி ரூபாய்க்கு சிறப்பு நிதி தொகுப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி அறிவிப்பு :

நாடு தழுவிய ஊரடங்கை 4வது முறையாக நீட்டிப்பது குறித்து மாநில அரசுகளின் பரிந்துரைகளை ஏற்று வரும் 18ஆம் தேதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.

31ஆம் தேதி வரை... :

தமிழகத்திற்கு வருகிற 31ஆம் தேதி வரை ரயில் போக்குவரத்து கிடையாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு ஏற்பாடு :

மருத்துவர்களின் ஆலோசனைகளை பொதுமக்கள் இணையம் வழியாக பெற தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. கட்டணமில்லா காணொலி மருத்துவ ஆலோசனை திட்டத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளது. நளயதெநநஎயniழின.in என்ற இணையத்தளத்தின் மூலமாக ஆலோசனை பெறலாம் என தெரிவித்துள்ளது.

மத்திய அரசு எச்சரிக்கை :

ஆரோக்கிய சேது செயலியின் தகவல்களை முறைக்கேடாக பயன்படுத்தினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய குழுவினர் எச்சரிக்கை :

விசாகப்பட்டினம் விஷ வாயுக்கசிவு எதிரொலியாக 5 கிராமங்களில் விளையும் காய்கறி, பழம் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று முதல்... :

கேரளாவில் இன்று முதல் விதிமுறைகளுக்கு உட்பட்டு கள்ளுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
குடிநீர் சப்ளை நிறுத்தம் :

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று குடிநீர் சப்ளை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்
ஐசிசி அறிவிப்பு :

இலங்கையில் நடைபெற இருந்த மகளிர் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தகுதிச்சுற்று போட்டி தள்ளி வைக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.



Reviewed by Bright Zoom on May 13, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.