Bright Zoom News மே 13 மாலை நேரச் செய்திகள்

Bright Zoom News
மே 13 மாலை நேரச் செய்திகள்

வருகிற 16ஆம் தேதி... புயல் உருவாக வாய்ப்பு - முக்கியச் செய்திகள் !

உலகச் செய்திகள்
2 சதவீதம் சரியும் :

பிரிட்டன் பொருளாதாரம் நிதியாண்டின் முதல் காலாண்டில், 2 விழுக்காடு குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

மாநிலச் செய்திகள்
தமிழக அரசு அரசாணை :

பல்வேறு நலவாரியங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு நிவாரண நிதியாக மேலும் ரூ.1000 வழங்குவதற்காக, 83 கோடியே 99 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

வருகிற 16ஆம் தேதி... :

மத்திய வங்க கடல் பகுதியில் வருகிற 16ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியர்களை மீட்டு கொண்டுவர திட்டம் :

இந்தியர்களை மீட்கும் வந்தே பாரதம் திட்டத்தின் 2ஆம் கட்டத்தில் 30,000 பேர் அழைத்து வரப்படுவார்கள் என விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

இந்திய தயாரிப்பு பொருட்கள் மட்டுமே... :

துணை ராணுவத்தினருக்காக செயல்படும் கேண்டீன்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

சிறப்பு திட்டத்தின் நோக்கம் :

தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே 20 லட்சம் கோடி சிறப்பு திட்டத்தின் நோக்கம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தெரிவித்துள்ளார்.

ரூ.1000 நிவாரணம் :

திருக்கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் உள்ளிட்டோருக்கு மேலும், ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கல்லூரி கல்வி இயக்கம் அறிவிப்பு :

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடைமுறையில் உள்ள இரு சுழற்சி முறை வகுப்புகளை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கல்லூரி கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.

இரட்டிப்பு சம்பளம் :

புதுச்சேரி தனியார் நிறுவனங்களில் அதிக நேரம் பணிபுரிந்தால் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு வெளியீடு :

பொது முடக்கத்திற்கு பின், தொழிற்சாலைகள் திறக்கப்படும் போது, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த வழிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
திறக்க அனுமதி :

மதுரையில் 34 வகையான கடைகளுடன் ஜவுளிக் கடைகள் மற்றும் காலணி கடைகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
அர்ஜுனா விருது :

மத்திய அரசு வழங்கும் விளையாட்டுத்துறைக்கான அர்ஜுனா விருதுக்கு இரண்டு வீராங்கனை பெயர்களை பரிந்துரை செய்கிறது பிசிசிஐ.

Bright Zoom News மே 13 மாலை நேரச் செய்திகள் Bright Zoom News  மே 13 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on May 13, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.