Bright Zoom Today News
மே 18 காலை நேரச் செய்திகள்
அம்பன் புயல்... புதன்கிழமை மாலை கரையை கடக்கும்.. - முக்கியச் செய்திகள்..!!
உலகச் செய்திகள்
முகக்கவசம் அணிய தேவையில்லை :
சீன நாட்டின் தலைநகரான பீஜிங்கில் இனி பொதுவெளியில் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
இன்று முதல் :
தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் இன்று (மே 18) முதல் வாரத்தின் ஆறு நாட்களும் செயல்பட உள்ளன. 50 சதவீத அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர்.
தயார் நிலையில் 17 என்டிஆர்எப் குழுக்கள் :
வங்கக் கடலில் அம்பன் புயல் உருவானதையொட்டி மேற்கு வங்கம், ஒடிசாவில் 17 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் (என்டிஆர்எப்) தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இன்று காலை மீண்டும் திறப்பு :
டெல்லியில் பழம் மற்றும் காய்கறிகள் விற்கும் மிகப்பெரிய காசிபுர் சந்தை இரண்டு நாட்களாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று காலை மீண்டும் திறக்கப்பட்டது.
வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு :
வங்கக் கடலில் உருவாகி அதி தீவிரப் புயலாக அறிவிக்கப்பட்டுள்ள அம்பன் புயல் புதன்கிழமை மாலை கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இன்று சிறப்பு ரயில் :
தமிழக தொழிலாளர்களுக்காக புனே-நெல்லை இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இன்று ஆலோசனை :
மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
மே 31ஆம் தேதி வரை :
அனைத்து விதமான பயணிகள் விமான சேவையும் மே 31ஆம் தேதி நள்ளிரவு வரை ரத்து செய்யப்படுவதாக விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அமைச்சரவைக் கூட்டம் :
புதுச்சேரியில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு :
சுங்கச் சாவடிகளை கடக்க பாஸ்டேக் இல்லாமல் அதற்காக ஒதுக்கப்பட்ட வழிகளில் பயணிக்கும் வாகனங்களிடம் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
சிறப்பு பேருந்துகள் :
வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூருக்கு அரசு ஊழியர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இலவச உணவு :
சேலம், புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் மே 31ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
ஜூலை 31ஆம் தேதி வரை ரத்து :
சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அனைத்தும் ஜூலை 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் சம்மதம் :
இங்கிலாந்திற்கு சென்று டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்திய டென்னிஸ் சங்கம் முடிவு :
இந்திய டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னா, வீரர் திவிஜ் சரண் ஆகியோரின் பெயரை அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்க இந்திய டென்னிஸ் சங்கம் முடிவு செய்துள்ளது.

Bright Zoom Today News மே 18 காலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
May 18, 2020
Rating:
Reviewed by Bright Zoom
on
May 18, 2020
Rating:

No comments: