Bright Zoom Today News மே 18 மாலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
மே 18 மாலை நேரச் செய்திகள்


நாளை முதல் சலூன் கடைகளை திறக்க... தமிழக அரசு அனுமதி - முக்கியச் செய்திகள் !

உலகச் செய்திகள்
உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு :

வீதிகளில் கிருமி நாசினிகள் தெளிப்பதால் பலனில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மாநிலச் செய்திகள்
மத்திய அரசு உத்தரவு :

அனைத்து பொருட்களையும் விற்பனை செய்ய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு அனுமதி :

சென்னையை தவிர ஊரகப்பகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

முதல்வர் நன்றி தெரிவிப்பு :

ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் திட்டங்களை அறிவித்துள்ள மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு :

ஒத்திவைக்கப்பட்ட சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஜூலை 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

பொதுத்தேர்வுகள் நடைபெறும் :

தமிழகத்தில் திட்டமிட்டப்படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு :

நாளை முதல் புதுச்சேரி மாநிலத்தில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு உத்தரவு :

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில்... :

அதிதீவிர ஆம்பன் புயல் மேலும் வலுப்பெற்று வங்கக் கடலில் சூப்பர் புயலாக உருமாறியுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு :

கர்நாடக மாநிலத்தில் ஜூன் 25ஆம் தேதி முதல் ஜூலை 4ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். மேலும், பியூசி ஆங்கிலத் தேர்வு ஜூன் 18ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.

பேருந்துகளை இயக்க முடிவு :

கேரளாவில் பொதுப் போக்குவரத்திற்காக பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் சுசீந்தரன் தெரிவித்துள்ளார்.

பேருந்து, ரயில் போக்குவரத்திற்கு அனுமதி :

கர்நாடக மாநிலத்துக்குள் பேருந்து போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் அனுமதிக்கப்படும் என முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

மாவட்டச் செய்திகள்
ஜூன் 12ஆம் தேதி :

காவிரி டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

விளையாட்டுச் செய்திகள்
ஐபிஎல் சாத்தியமற்றது - அருண் துமால் :

மைதானங்களை திறக்க மத்திய அரசு அனுமதி கொடுத்தாலும், வெகுவிரைவில் ஐபிஎல் சாத்தியமற்றது என்று பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.


Bright Zoom Today News மே 18 மாலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  மே 18 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on May 18, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.