Bright Zoom Today News மே 19 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
மே 19 காலை நேரச் செய்திகள்


ஆம்னி பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது - முக்கியச் செய்திகள் !

உலகச் செய்திகள்
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் :

ஜப்பானில் மியாகி பிராந்தியத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவானது.
மாநிலச் செய்திகள்
முன்பதிவு தொடங்கியது :

தமிழகத்தில் இணையம் வழியாக ஆம்னி பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது. ஜூன் 7ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு செல்வதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு :

பருவத்தேர்வுக்காக மாணவர்களின் விவரங்களை மே 22ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

இன்று முதல் திறக்க உத்தரவு :

தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர ஏனைய கிராமப் பகுதிகளில் சலூன் கடைகளை இன்று முதல் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

டெல்லி அரசு அனுமதி :

தனியார் நிறுவனங்கள் முழுமையான ஊழியர்களுடன் இயங்க டெல்லி அரசு அனுமதி அளித்துள்ளது.

மத்திய அரசு உத்தரவு :

மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் திட்ட பணிகளுக்கு விரைந்து சுற்றுச்சூழல் அனுமதி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாளை திறக்க நடவடிக்கை :

புதுச்சேரியில் இன்று திறப்பதாக இருந்த மதுபான கடைகள் துணைநிலை ஆளுநர் ஒப்புதல் பெற்ற பின்பு நாளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

காணொலிக் காட்சி மூலம்... :

காணொலிக் காட்சி மூலம் ஒரு நீதிபதி அமர்வு தினமும் 40 வழக்குகளை விசாரிக்க அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாளை கரையைக் கடக்கிறது :

சூப்பர் புயலாக உருவெடுத்துள்ள ஆம்பன் புயல் மேற்கு வங்கத்தின் அருகே நாளை கரையைக் கடக்கவுள்ளது. புயலின் தாக்கம் கடுமையாக இருக்கலாம் என்பதால் பலத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

விடுப்பு எடுக்க அனுமதி இல்லை :

தேர்வு பணிகாலம் என்பதால் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க அனுமதி இல்லை என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

கர்நாடகத்திற்குள் நுழைய தடை :

தமிழகம், கேரளாவை சேர்ந்தவர்கள் கர்நாடகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாக, கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
மீண்டும் கட்டணம் :

சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் நேற்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இ-பாஸ் பெற வேண்டும் :

நீலகிரி மாவட்ட நிர்வாகத்திடம் இ-பாஸ் பெற்று தான், வெளி மாவட்டத்தினர் வர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
உலகின் சிறந்த பேட்ஸ்மேன்... :

உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட்கோலிதான் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் புகழாரம் சூட்டியுள்ளார்.

Bright Zoom Today News மே 19 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  மே 19 காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on May 19, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.