Bright Zoom Today News மே 19 மாலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
மே 19 மாலை நேரச் செய்திகள்


10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு... ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு - முக்கியச் செய்திகள் !


உலகச் செய்திகள்
பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் :

பாகிஸ்தானில் இரு வேறு பயங்கரவாத தாக்குதல்களில் படை வீரர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர்.
மாநிலச் செய்திகள்
ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு :

ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று  ஜூன் 15ஆம் தேதிக்கு தமிழக அரசு ஒத்திவைத்துள்ளது.

அமைச்சரவை கூட்டம் :

டெல்லியில் நாளை காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.

விமானங்கள் வாங்க திட்டம் :

இந்திய விமானப்படைக்கு 450 போர் விமானங்கள் வாங்க திட்டமிடப்பட்டு இருப்பதாக விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதௌரியா தெரிவித்துள்ளார்.

காணொளி காட்சி மூலம் ஆலோசனை :

ஆம்பன் புயலை எதிர்கொள்வது குறித்து ஒடிசா முதலமைச்சர் அம்மாநில அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

மழை பெய்ய வாய்ப்பு :

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாடுதழுவிய வேலைநிறுத்தம் :

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வரும் வெள்ளிக்கிழமை நாடுதழுவிய வேலைநிறுத்தம் செய்யத் தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.

ஆலோசனை :

நாடாளுமன்ற குழுக்களின் கூட்டங்களை காணொளிக் காட்சி வாயிலாக நடத்துவது தொடர்பாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவும், மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும் இன்று ஆலோசனை நடத்தினர்.

உத்தரப்பிரதேச அரசு அனுமதி :

வெளிமாநில தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா ஏற்பாடு செய்த ஆயிரம் பஸ்களுக்கு உத்தரப்பிரதேச அரசு அனுமதி அளித்துள்ளது.

புதுச்சேரியில் கடல் சீற்றம் :

புதுச்சேரியில் ஆம்பன் புயல் காரணமாக ஏற்பட்ட கடல் சீற்றத்தால் மீனவ கிராமங்களில் கரையோரங்களில் இருந்த வீடுகள் சேதமடைந்தன.

உள்துறை அமைச்சகம் உத்தரவு :

புலம்பெயர் தொழிலாளர்களின் துன்பங்களை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
விலையில்லா உணவு :

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின் பேரில், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் மே 31ஆம் தேதி வரை விலையில்லா உணவு வழங்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
இஷாந்த் சர்மா தெரிவிப்பு :

நான் சந்தித்ததிலேயே ரிக்கி பாண்டிங்தான் மிகவும் சிறந்த பயிற்சியாளர் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.



Bright Zoom Today News மே 19 மாலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  மே 19 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on May 19, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.