Bright Zoom Today News மே 15 மாலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
மே 15 மாலை நேரச் செய்திகள்


வரும் திங்கட்கிழமை முதல் அரசு அலுவலகங்கள் இயங்கும்.. தமிழக அரசு - செய்திகள் !

உலகச் செய்திகள்
ஜூலை மாத இறுதிக்குள்... :

பாகிஸ்தான், சீனாவை ஒட்டிய எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்திய விமானப்படைக்கு வலிமை சேர்க்கும் விதத்தில் வரும் ஜூலை மாத இறுதிக்குள் 4 ரபேல் போர் விமானங்கள் பிரான்சில் இருந்து இந்தியாவிற்கு வரவுள்ளது.

தாய்ப்பால் அனுப்பும் தாய்மார்கள் :

பதப்படுத்தப்பட்ட தாய்ப்பாலை சிங்கப்பூரிலிருந்து, மலேசியாவில் வசிக்கும் தங்கள் குழந்தைகளுக்கு தாய்மார்கள் அனுப்பி வருகின்றனர்.

அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவிப்பு :

சீனாவில் அமெரிக்கா செய்துள்ள பலநூறு கோடி ரூபாய் முதலீட்டை திரும்ப பெறப்போவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மாநிலச் செய்திகள்
வரும் திங்கட்கிழமை முதல்... :

வரும் திங்கட்கிழமை முதல் அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன், வாரத்திற்கு 6 நாட்கள் இயங்க தமிழக அரசு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஒரு வாய்ப்பு :

நீட் தேர்வு எழுதும் மையங்களை விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்ய தேர்வர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கடிதம் :

புகையிலை விற்பனைக்கும், பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கும் தடை விதிக்க வேண்டுமென அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச அரசுகளுக்கும் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கடிதம் எழுதியுள்ளார்.

யாரும் அனுமதிக்கப்படவில்லை :

உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற விஷ்ணு கோவிலான பத்ரிநாத் கோவில் நடை இன்று காலை திறக்கப்பட்ட போதும், பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

ஏழு வண்ணங்களில் டோக்கன் :

மதுக்கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், ஞாயிறு முதல் திங்கள் வரை சிவப்பு, பச்சை, மஞ்சள் உள்பட 7 வண்ணங்களில் டோக்கன் வழங்கவும், குறிப்பிட்ட வண்ண டோக்கன் உள்ளவர்கள் குறிப்பிட்ட நாட்களில் டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்க டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

3-ம் கட்ட அறிவிப்பு :

மத்திய அரசின் ரூ.20 லட்சம் கோடி சிறப்புத் திட்டத்தில் 3-ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடித்தொழில், பால் வளம் உள்ளிட்ட துறைகளுக்கு 11 திட்டங்களை நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு விளைப்பயிரை மையமாக கொண்டு உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மாவட்டச் செய்திகள்
தங்கம் விலை உயர்வு :

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 152 ரூபாய் உயர்ந்து ரூ.35,872க்கு விற்பனையாகிறது.
விளையாட்டுச் செய்திகள்
நாளை பண்டேஸ்லிகா கால்பந்து :

வெகு நாட்கள் கழித்து ஜெர்மனில் நாளை பண்டேஸ்லிகா கால்பந்து விளையாட்டு தொடங்க இருக்கிறது.

Bright Zoom Today News மே 15 மாலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  மே 15 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on May 15, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.