Bright Zoom Today News மே 15 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
மே 15 காலை நேரச் செய்திகள்



இன்று மாலை 5 மணிக்கு... தமிழக முதல்வர் காணொலி மூலம் ஆலோசனை - காலைச் செய்திகள் !

உலகச் செய்திகள்
பராக் ஒபாமா முடிவு :

இந்தாண்டு இறுதியில் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடனுக்கு ஆதரவாக தீவிரமாக பிரச்சாரம் செய்வது என, முன்னாள் அதிபர் பராக் ஒபாமா முடிவு செய்துள்ளார்.

மாநிலச் செய்திகள்
இன்று மாலை 5 மணிக்கு :

தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

நாளை புயல் உருவாகும் :

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து நாளை புயல் சின்னமாக மாறும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சகம் தெரிவிப்பு :

இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை சுமார் ஒரு லட்சம் வெளிநாட்டினர் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர் என்று விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவிப்பு :

மேற்கு வங்க அரசு ரயில்களை அனுமதித்தால் தினமும் 100 ரயில்களை விடத் தயார் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ரயில்வே துறை அறிவிப்பு :

ரயில் பயணச்சீட்டுகளை பயண தேதியில் இருந்து ஆறு மாதம் வரை கவுண்டரில் கொடுத்து முழுத் தொகையை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

தமிழக அரசு விளக்கம் :

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 59 ஆக உயர்த்தப்பட்டது, யாருக்கெல்லாம் பொருந்தாது என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

டெல்லி அரசு கோரிக்கை :

மே 17ஆம் தேதிக்குப் பிறகு மால்களில் உள்ள கடைகள் உட்பட அனைத்துக் கடைகளையும் திறக்க அனுமதியளிக்குமாறு மத்திய அரசுக்கு டெல்லி அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு :

9 மற்றும் 11ஆம் வகுப்பு ஆண்டு தேர்வுகளில் தோல்வியுற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி அடிப்படையில் மீண்டும் ஒரு தேர்வுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
வெள்ளை நிற வட்டம் :

ஈரோடு ரயில்நிலையத்தில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக வெள்ளை நிற வட்டம் போடப்பட்டுள்ளன.

மலர் கண்காட்சி ரத்து :

ஊட்டியில் ஆண்டுதோறும் 5 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்
பலன் தராது :

நீண்ட கால இலக்கு எந்த வகையிலும் பலன் தராது என்று இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

தேசிய ரைபிள் சங்கம் பரிந்துரை :

துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அஞ்சும் மோட்ஜிலுக்கு கேல்ரத்னா விருதும், தமிழக வீராங்கனை இளவேனிலுக்கு அர்ஜூனா விருதும் வழங்கும்படி தேசிய ரைபிள் சங்கம் பரிந்துரை செய்துள்ளது.

Bright Zoom Today News மே 15 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  மே 15 காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on May 15, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.