Bright Zoom Today News
ஜுன் 02 காலை நேரச் செய்திகள்
சலூன்கள், அழகு நிலையங்களுக்கு... ஆதார் அவசியம்... தமிழக அரசு உத்தரவு - செய்திகள் !
உலகச் செய்திகள்
ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை :
அமெரிக்காவில் போராட்டக்காரர்கள் வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்தபோவதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாநிலச் செய்திகள்
பள்ளிக்கல்வித்துறை உத்தரவு :
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களில் போதிய வசதி உள்ளதா? என முதன்மை தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆதார் அட்டை அவசியம் :
தமிழகத்தில் உள்ள சலூன்கள், அழகு நிலையங்கள், ஸ்பா நிலையங்களுக்கு செல்வோர் ஆதார் அட்டை அவசியம் கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
விரைவில் மாசு கட்டுப்பாட்டு விதிகள் :
இந்திய நகரங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்த விரைவில் மாசு கட்டுப்பாட்டு விதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
24 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் :
24 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.
அரசாணை வெளியீடு :
தமிழகத்தில் இறுதி ஊர்வலங்கள், சடங்குகளில் 20 பேர் வரை பங்கேற்கலாம் என்று இருந்ததை, 50 பேர் வரை பங்கேற்க அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மிக கனமழை பெய்யும் :
அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர புயலாக உருவெடுத்து, வடக்கு மகாராஷ்டிரம், தெற்கு குஜராத் கடற்கரைகளுக்கு இடையே நாளை (புதன்கிழமை) கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவ்விரு மாநிலங்களின் கடலோர பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இயல்பு நிலை திரும்ப தொடங்கியது :
தமிழகத்தில் 2 மாதங்களுக்குப் பிறகு நேற்று பேருந்துகள் ஓடியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர். நகை, துணிக்கடைகள் உட்பட பெரிய கடைகளும் திறக்கப்பட்டதால் இயல்பு நிலை திரும்ப தொடங்கி உள்ளது.
மாவட்டச் செய்திகள்
ஜூன் 15ஆம் தேதி வரை :
மதுரை மண்டலத்திற்குட்பட்ட அரசு பேருந்துகளில் மார்ச் மாத பஸ் பாஸ் ஜூன் 15ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் என்று மதுரை மண்டல போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
திருச்சி ரயில்வே கோட்டம் அறிவிப்பு :
மார்ச் 22ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, அரியலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் பயண கட்டணத்தை திருப்பி பெற்றுக்கொள்வதற்கான தேதிகளை திருச்சி ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
3 மாத இடைவெளிக்குப் பிறகு... :
இங்கிலாந்தில் 2வது டிவிஷன் கால்பந்து போட்டிகள் 3 மாத இடைவெளிக்குப் பிறகு ஜூன் 20ஆம் தேதி தொடங்குகின்றன.

Reviewed by Bright Zoom
on
June 02, 2020
Rating:

No comments: