Bright Zoom Today News ஜுன் 05 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுன் 05 காலை நேரச் செய்திகள்


வரும் 8-ம் தேதி வழிபாட்டு தலங்கள் திறப்பு... நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு - செய்திகள் !!

உலகச் செய்திகள்
7 முக்கிய ஒப்பந்தங்கள் :

ராணுவ தளங்களை பயன்படுத்துவது உள்ளிட்ட 7 முக்கிய ஒப்பந்தங்கள் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே கையெழுத்தாகி உள்ளன.

மாநிலச் செய்திகள்
தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிப்பு :

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் உட்பட உலகின் 11 முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளதாக தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு வெளியீடு :

பல்வேறு மாநிலங்களில், வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் மற்றும் ஹோட்டல்கள் ஆகியவை வரும் 8ஆம் தேதியன்று திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு :

வெளிநாடுகளில் வேலை இழந்து நாடு திரும்பியவர்களுக்காக ஸ்வதேஸ் என்ற இணையதளத்தின் மூலம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டம் வாபஸ் :

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த அரசு மருத்துவர்களின் கருப்பு பேட்ஜ் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு :

பொதுத்தேர்வு மையங்களுக்கு காலை 7.45 மணிக்குள் முதன்மை கண்காணிப்பாளர்கள் செல்ல வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. முதன்மை தேர்வு மைய கண்காணிப்பாளர் துணை மையங்களுக்கான வினாத்தாள்களை பிரித்து தர வேண்டும், மேலும் பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் :

கடற்படைக்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட உள்ள தேஜாஸ்-என் ரக போர் விமானத்திற்கான வடிவமைப்பிற்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மாவட்டச் செய்திகள்
மேட்டூர் அணையின் நீர்வரத்து :

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,118 கனஅடியில் இருந்து 2,504 கனஅடியாக குறைந்துள்ளது.

வரும் 7ஆம் தேதி வரை... :

சென்னை விமான நிலைய நிர்வாக அலுவலகம் வரும் 7ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தீயணைப்பு வீரர்களுக்கு உத்தரவு :

சென்னை முழுவதும் சிறிய சந்து பகுதிகளில் கூட கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என தீயணைப்பு வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
இந்திய கால்பந்து சம்மேளனம் முடிவு :

ஆசிய கிளப் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிக்கான, 3வது அணியாக பெங்க;ரு எப்.சிக்கு வாய்ப்பு வழங்க இந்திய கால்பந்து சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

இந்திய கோல்ப் யூனியன் பரிந்துரை :

இந்திய கோல்ப் வீரர் ரஷித்கான், வீராங்கனைகள் அதிதி அசோக், தீக்‌ஷா டாகர் ஆகியோரது பெயரை அர்ஜூனா விருதிற்கு இந்திய கோல்ப் யூனியன் பரிந்துரை செய்துள்ளது.

Bright Zoom Today News ஜுன் 05 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுன் 05 காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on June 05, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.