Bright Zoom Today News ஜுன் 04 மாலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுன் 04 மாலை நேரச் செய்திகள்


தமிழகம் முழுவதும் நாளை போராட்டம் - முக்கியச் செய்திகள் !

உலகச் செய்திகள்
இங்கிலாந்து குடியேற்ற விதிகள் மாற்றப்படும் :

ஹாங்காங்கில் சீனா பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றினால், ஹாங்காங்கில் இங்கிலாந்து குடியேற்ற விதிகள் மாற்றப்படும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க விமானங்களுக்கு அனுமதி :

சீனா வெளிநாட்டு விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டு உள்ள நிலையில், அமெரிக்க விமானங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

மாநிலச் செய்திகள்
மழைக்கு வாய்ப்பு :

மேற்குதொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரயில்வே துறைக்கு தமிழக அரசு கடிதம் :

ரயில்கள் இயங்க ஆரம்பித்த நிலையில் தமிழகத்திற்கு மேலும் 3 ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி கோரியுள்ளது.

நாளை முதல் ரயில்வே டிக்கெட்டுகள் ரத்து :

நாளை முதல் ரயில்வே டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படுவதாகவும், அதற்கான பணத்தை முன்பதிவு மையங்களிலேயே பெற்று கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை போராட்டம் :

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாளை போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கூட்டமைப்பு சங்கம் அறிவித்துள்ளது.

மருத்துவமனைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டாம் :

முதல்வரின் காப்பீடு திட்ட பயனாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டாம் எனவும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக தொகையை செலுத்த கோரினால் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

250 கோடி ரூபாய் :

கேரளாவில் மே 28ஆம் தேதி முதல் ஒரு வாரத்தில் 250 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.

போராட்டத்தில் ஈடுபட ஊழியர்கள் முடிவு :

இந்திய படைத் தளவாட கருவி உற்பத்தி தொழிற்சாலைகளை கார்ப்பரேட்டாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 82,000 ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

மாவட்டச் செய்திகள்
நடிகர் ரஜினிகாந்த் கடிதம் :

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு இயக்குநரை நியமனம் செய்தது பாராட்டத்தக்கது என மத்திய அரசிற்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.

விளையாட்டுச் செய்திகள்
ஐ.பி.எல். வீரர்களை கொண்ட சிறந்த லெவன் அணி :

ஐ.பி.எல். கிரிக்கெட் லீக்கில் விளையாடிய வீரர்களை கொண்டு சிறந்த அணியை உருவாக்கிய ஹர்திக் பாண்ட்யா, எம்எஸ் டோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார்.



Bright Zoom Today News ஜுன் 04 மாலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுன் 04 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on June 04, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.