Bright Zoom Today News ஜுன் 05 மாலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுன் 05 மாலை நேரச் செய்திகள்


பணம் திரும்ப பெற 6 மாதம் அவகாசம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு - முக்கியச் செய்திகள் !

உலகச் செய்திகள்
இரண்டாவது சந்திர கிரகணம் :

இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம், இன்று நள்ளிரவு 11.15 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 02.34 மணி வரை நீடிக்கும்.
மாநிலச் செய்திகள்
வரும் 8ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி... :

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில், வரும் 8ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 மாத அவகாசம்... தெற்கு ரயில்வே அறிவிப்பு :

கவுண்டரில் கூட்டத்தை குறைக்க ரத்து செய்யப்பட்ட ரயில் டிக்கெட்களுக்கான பணத்தை திரும்ப பெற 6 மாத அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வரும் 11ஆம் தேதி முதல் :

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 11ஆம் தேதி முதல் அனைத்து மாநில பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலா ரூ.10,000 நிதி உதவி :

ஆந்திராவில் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கான ரூ.262 கோடி மதிப்பிலான ஒய்.எஸ்.ஆர் வாகன மித்ரா திட்டத்தின் மூலம் தலா ரூ.10,000 நிதி உதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

அக்டோபர் 4ஆம் தேதி... முதல்நிலைத் தேர்வு :

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கர்நாடக அரசு தடை :

தமிழக எல்லையில் உள்ள மாதேஸ்வரன் மலை கோவிலுக்கு செல்ல தமிழக பக்தர்களுக்கு கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் தெரிவிப்பு :

அடுத்த ஓராண்டுக்கு எந்தவித புதிய அரசாங்க திட்டங்களும் அறிமுகம் செய்யப்படாது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

எட்டுவழிச் சாலை வந்தால் தான்... அதன் அருமை புரியும் :

வாகனப் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், சேலம்-சென்னை எட்டுவழிச் சாலை வந்தால் தான் அதன் அருமை புரியும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

ஐ.நா. நல்லெண்ணத்தூதராக மாணவி நேத்ரா தேர்வு :

ஐ.நா. நல்லெண்ணத்தூதராக மதுரை சலூன்கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாவட்டச் செய்திகள்
முதலமைச்சர் உத்தரவு :

ஆழியாறு மற்றும் பவனிசாகர் அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

பலவகையான வண்ணத்துப்பூச்சிகள் :

சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள குருவம்பட்டி வன உயிரியல் பூங்காவிற்கு பலவகையான வண்ணத்துப்பூச்சிகள் வரத் தொடங்கியிருக்கின்றன.
விளையாட்டுச் செய்திகள்
சஞ்சய் பாங்கர் தெரிவிப்பு :

கேப்டன் பதவி தொடர்பாக கோலிக்கும், ரோகித்திற்கும் இடையே போட்டியில்லை என முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.

Bright Zoom Today News ஜுன் 05 மாலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுன் 05 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on June 05, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.