Bright Zoom Today News ஜுன் 06 மாலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுன் 06 மாலை நேரச் செய்திகள்


தனியார் பள்ளிகளுக்கு... தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை - செய்திகள் !

உலகச் செய்திகள்
ஹஜ் பயணம் ரத்து :

2020-ம் ஆண்டிற்கான ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுவதாக ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் அறிவித்துள்ளார்.

உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரிக்கை :

ஜூலை மாதத்தில் வெட்டுக்கிளி கூட்டத்தின் மற்றொரு படையெடுப்பை இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரித்துள்ளது.

மாநிலச் செய்திகள்
மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் :

தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடும் நடவடிக்கை :

ஆன்லைன் மூலம் கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்தித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா முழுவதும்... :

திங்கட்கிழமை முதல் (ஜுன் 08) இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறக்கப்படவுள்ளன.

தீவிரம் அடைந்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலை :

ஆம்பன் மற்றும் நிசர்கா புயலை தொடர்ந்து கதி என்ற புதிய புயல் இந்தியாவை தாக்க இருக்கிறது. வங்கக்கடலில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது.

முதல்வர் தொடங்கி வைத்தார் :

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும், ஒளிரும் தமிழ்நாடு என்ற காணொளி மாநாட்டினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

ஜூலை 3வது வாரத்தில் வெளியீடு :

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 3வது வாரத்தில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

தமிழக அரசு புள்ளிவிவரம் வெளியீடு :

மே 6ஆம் தேதி முதல் ஜூன் 2ஆம் தேதி வரை 1.26 லட்சம் பேர் தமிழகம் திரும்பியிருப்பதாக தமிழக அரசு புள்ளிவிவரத்தை வெளியிட்டிருக்கிறது.

மாவட்டச் செய்திகள்
காலை 6 முதல் இரவு 8 மணி வரை :

கோவை மாவட்டத்தில் ஹோட்டல் மற்றும் உணவகங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. உணவகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்தக்கூடாது, மேலும் காலை 6 முதல் இரவு 8 மணி வரை ஹோட்டல் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா துறைக்கு நல்லதல்ல... அமைச்சர் கடம்பூர் ராஜூ :

ஆன்லைனில் படம் வெளியிடுவது தொடர்ந்தால் சினிமா துறைக்கு உகந்ததாக இருக்காது என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

விளையாட்டுச் செய்திகள்
ஜூன் 11ஆம் தேதி :

கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையால் 3 ஆண்டு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து பாகிஸ்தான் பேட்ஸ்மேன் உமர் அக்மல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை ஜூன் 11ஆம் தேதி நடைபெற உள்ளது.



Bright Zoom Today News ஜுன் 06 மாலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுன் 06 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on June 06, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.