Bright Zoom Today News
ஜுன் 17 காலை நேரச் செய்திகள்
ஜுன் 27ஆம் தேதிக்குள் ஒப்படைக்க... அரசு தேர்வுத்துறை உத்தரவு - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
தென்கொரியா எச்சரிக்கை:
அமைதியை சீர்குலைக்கும் வகையில் வடகொரியா நடந்துகொண்டால், தங்களின் பதிலடி மிகவும் மோசமாக இருக்கும் என தென்கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
20 இந்திய வீரர்கள் வீரமரணம்:
லடாக் பகுதியில் சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்தவர் உட்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
மாநிலச் செய்திகள்
ஜுன் 27ஆம் தேதிக்குள்:
எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் பெற்ற காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களை ஜுன் 27ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு:
தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக அடுத்த இரு தினங்களில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு அரசாணை வெளியீடு:
கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.21 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் 22ஆம் தேதிக்குள் தெரிவிக்க கெடு:
சி.ஐ.சி.எஸ்.இ 10, 12ஆம் வகுப்புக்கான மீதமுள்ள தேர்வுகளை விரும்பும் மாணவர்கள் எழுதலாம். இல்லையெனில், அவர்களுக்கு முந்தைய பள்ளித் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி முடிவு வழங்கப்படும். இந்த 2ல் எது வேண்டும் என்பதை மாணவர்கள் வரும் 22ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும், என்று சி.ஐ.சி.எஸ்.இ நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை உத்தரவு:
ஜூன் 22ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் இலவச பாடப்புத்தகங்களை பள்ளிகளில் கொண்டு சேர்க்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உரிய முன்னெச்சரிக்கையுடன் புத்தகம் அனுப்பும் பணி மேற்கொள்ள கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தெற்கு ரயில்வே தெரிவிப்பு:
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்;ர் மாவட்டங்களில் ஜூன் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை ரயில் நிலையங்கள் மூடப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அனுமதி வழங்கப்பட்டுள்ளது:
மேகாலயாவில் வழிபாட்டு தலங்களில் திருமணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி கிடையாது என்று துணை முதல்-மந்திரி பிரிஸ்டோன் டைன்சாங் தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
வீட்டில் இருந்தே பணியாற்றலாம்:
சென்னை, திருவள்;ர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதிகள் ஜூன் 30ஆம் தேதி வரை வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 31ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறும் என நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ தெரிவித்துள்ளார். மேலும், போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
20 ஓவர் உலக கோப்பை போட்டி:
இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்துவது சாத்தியமற்றது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவர் ஏர்ல் எட்டிங்ஸ் தெரிவித்துள்ளார்.

Bright Zoom Today News ஜுன் 17 காலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
June 17, 2020
Rating:
Reviewed by Bright Zoom
on
June 17, 2020
Rating:

No comments: