Bright Zoom Today News ஜுன் 16 மாலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுன் 16 மாலை நேரச் செய்திகள்


நிவாரண பணம் வீடு தேடி... தமிழக முதல்வர் அறிவிப்பு - முக்கியச் செய்திகள்..!!

உலகச் செய்திகள்
எல்லை மோதல்:

லடாக் எல்லையில் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி இந்தியா அங்கு தனது படைகளை கட்டுப்படுத்த வேண்டும் எனவும், எல்லையை கடந்து வந்து ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனவும் சீனா கேட்டுக் கொண்டுள்ளது.

மாநிலச் செய்திகள்
மழைக்கு வாய்ப்பு:

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிப்பு:

லடாக் எல்லையில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீனா இடையே நடந்த மோதலில் இருதரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும், ராணுவ வீரர்கள் 2 பேரும் இந்த மோதலில் வீர மரணம் அடைந்துள்ளதாக, பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

முதல்வர் அறிவிப்பு:

தமிழகத்தில் மீண்டும் பொதுமுடக்கம் அமலுக்கு வர உள்ள சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நிவாரண பணம் நேரடியாக வீடுகளில் விநியோகிக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இறுதி ஆண்டு தேர்வு ரத்து:

புதுச்சேரி பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வு ரத்து செய்யப்டுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. செய்முறை தேர்வுகள் மற்றும் உள்மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி இரங்கல் :

இந்திய-சீன எல்லையில் நடந்த தாக்குதலில் 3 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

வாகன சோதனை தீவிரம்:

தமிழகத்தையொட்டிய கர்நாடக எல்லையில் வாகனங்களின் மீதான சோதனை மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளது.

முப்படை தளபதிகளுடன் ஆலோசனை:

சீன ராணுவத்தின் தாக்குதலில் இந்திய வீரர்கள் 3 பேர் பலியானதை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பயணம் ரத்து:

லடாக்கில் ஏற்பட்ட பிரச்சனையால் ராணுவ தளபதி முகுந்த் நரவானேவின் பதான்கோட் பயணம் ரத்து செய்யப்பட்டது.

மாவட்டச் செய்திகள்
கல்லணையிலிருந்து நீர் திறப்பு:

தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காக காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு கல்லணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.

நாளை முதல்:

தென்காசியில் நாளை முதல் கடைகளில் விற்பனை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.

பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது:

உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா வருகின்ற 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. இந்த விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
சிறந்த பந்து வீச்சாளர்:

சொந்த மண்ணில் விளையாடும்போது அஸ்வினை விட சிறந்த பந்து வீச்சாளர் யாரும் இல்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சக்லைன் முஷ்டாக் தெரிவித்துள்ளார்.

Bright Zoom Today News ஜுன் 16 மாலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுன் 16 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on June 16, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.