Bright Zoom Today News ஜுன் 17 மாலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுன் 17 மாலை நேரச் செய்திகள்


சென்னையில் நாளை நள்ளிரவு முதல்... - முக்கியச் செய்திகள் !

உலகச் செய்திகள்
இந்தியா முன்வர வேண்டும்:

லடாக் எல்லையில் மேலும் மோதல்கள் ஏற்படுவதை விரும்பவில்லை என தெரிவித்துள்ள சீனா, எல்லை தொடர்பான விவகாரங்களை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க இந்தியா முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.

மாநிலச் செய்திகள்
அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு:

சீன-இந்திய எல்லை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக வருகிற வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 19ஆம் தேதி) அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி எச்சரிக்கை:

இந்தியா எப்போதும் அமைதியையே விரும்பினாலும், அத்துமீறினால் திருப்பி அடிக்க தயங்காது என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வானிலை ஆய்வு மையம்:

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேற்கு மாவட்டங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய இணையதளத்தை முதலமைச்சர் துவக்கி வைத்தார்:

தமிழ்நாட்டில் வேலை நாடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும் இணையதளம் வழியாக இணைத்து, வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கில் வேலைவாய்ப்பு இணையதளத்தையும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இணையதள பயிற்சி வகுப்பையும் தமிழக முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி உரை:

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வரும் ஜூன் 21ஆம் தேதி நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.

பிளஸ்-2 மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு:

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படும் என தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

வீர மரணமடைந்த 20 வீரர்கள் பட்டியல் வெளியீடு:

லடாக்கில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த 20 வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 20 வீரர்களின் பட்டியலில் தமிழக ராணுவ வீரரான ஹவில்தார் கே.பழனியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

மாவட்டச் செய்திகள்
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு:

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து மாஸ்க் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார்.

சென்னையில் நாளை நள்ளிரவு முதல்:

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை நள்ளிரவு முதல் முழு பொதுமுடக்கம் அமலாக்கப்படவுள்ள நிலையில், கண்காணிப்பை தீவிரப்படுத்த தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

தங்க நாணயம் கண்டுபிடிப்பு:

சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே அகழாய்வு பணியில் கி.பி.17ஆம் நூற்றாண்டை சேர்ந்த தங்க நாணயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்சார் மூலம் கண்காணிக்கும் கருவி:

பொது இடங்களில் தனிநபர் இடைவெளியை சென்சார் மூலம் கண்காணிக்கும் கருவியை கோவையை சேர்ந்த தனியார் தொழில்நுட்ப நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

விளையாட்டுச் செய்திகள்
பகல்-இரவு டெஸ்ட் போட்டி சவாலானதாக இருக்கும்:

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேனான ரோகித் சர்மா, ஆஸ்திரேலிய மண்ணில் பகல்-இரவு டெஸ்ட் போட்டி சவாலானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.




Bright Zoom Today News ஜுன் 17 மாலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுன் 17 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on June 17, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.