Bright Zoom Today News ஜுன் 18 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுன் 18 காலை நேரச் செய்திகள்



5 நாட்களுக்கு நியாய விலை கடைகள் இயங்காது.. தமிழக அரசு - செய்திகள்..!!

உலகச் செய்திகள்
ஐ.நா உறுப்பினராக இந்தியா தேர்வு:

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமில்லாத உறுப்பினராக இந்தியா 8வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிரந்தரமல்லா உறுப்பினராக 2021 ஜனவரி முதல் 2022 வரை இந்தியா இருக்கும்.

தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக சீனா அறிவிப்பு:

இந்திய-சீன எல்லையில் உள்ள சர்ச்சைக்குரிய கல்வான் பள்ளத்தாக்கு பகுதி தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

மாநிலச் செய்திகள்
மத்திய அரசிடம் தமிழக முதல்வர் வேண்டுகோள்:

முடங்கியுள்ள சிறு-குறு தொழில்களை மீட்டெடுக்க ரூ.5,000 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென, மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு:

இந்திய-சீனா இடையே எல்லையில் மோதல் நீடித்து வரும் நிலையில், 500 வகையான சீனப் பொருட்களை பட்டியலிட்டு அவற்றை புறக்கணிக்க போவதாக கெய்ட் என்றழைக்கப்படும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தேர்வுத்துறை உத்தரவு:

பத்தாம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் விடைத்தாள்கள், மதிப்பெண் பதிவேடுகள் ஆகியவற்றை மாணவர்களின் பதிவெண் அடிப்படையில், மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் நேரில் ஒப்படைக்க வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை முதல்:

ஆயிரம் ரூபாயை வீடு வீடாக விநியோகிக்கும் காரணத்தால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வரும் வெள்ளிக்கிழமை (நாளை) முதல் 5 நாட்களுக்கு நியாய விலை கடைகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்களின் விடுப்புகள், பணி நாளாகவே கருதப்படும்:

பேருந்து சேவை முற்றாக முடங்கிய காலத்தில் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கான விடுப்புகள், பணி நாளாகவே கருதப்படும் என்று தலைமைச் செயலாளர் க.சண்முகம் அறிவித்துள்ளார்.

அவசர சட்டம் பிறப்பிப்பு:

சம்பள குறைப்பு உள்ளிட்ட நிதி நடவடிக்கைகளுக்காக, தெலுங்கானாவில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாவட்டச் செய்திகள்
சென்னை காவல்துறை எச்சரிக்கை:

பொதுமுடக்கத்தின் போது அனுமதி சீட்டு இன்றி வாகனங்களில் செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்:

ராமநாதபுரம், மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தில் இந்தியா-சீன எல்லையில் வீரமரணம் அடைந்த பழனியின் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

விளையாட்டுச் செய்திகள்
லா லிகா கால்பந்து தொடர்:

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில், பார்சிலோனா அணி 2-0 என்ற கோல் கணக்கில் லெகானஸ் அணியை வீழ்த்தியது.

உலக சாம்பியன் கோல்மேன் இடைநீக்கம்:

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் உலக சாம்பியனான அமெரிக்காவின் கிறிஸ்டியன் கோல்மேன் ஊக்கமருந்து தடுப்பு விதிமுறைகளை மீறியதாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.



Bright Zoom Today News ஜுன் 18 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுன் 18 காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on June 18, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.