Bright Zoom Today News ஜுன் 26 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுன் 26 காலை நேரச் செய்திகள்


ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை ரத்து.. ரயில்வே துறை - முக்கியச் செய்திகள்..!!

உலகச் செய்திகள்
ஏவுகணைகள் வாங்கும் திட்டம் ரத்து:

அமெரிக்காவிடம் இருந்து பாதுகாப்பு ஏவுகணைகள் வாங்கும் திட்டத்தை ரத்து செய்துள்ளதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் டாரோ கோனோ தெரிவித்துள்ளார்.

மிகவும் கவலை அளிக்கிறது-இங்கிலாந்து பிரதமர்:

இந்தியா-சீனா இடையேயான எல்லை பிரச்சனையால் பதற்றம் அதிகரிப்பது மிகவும் கவலை அளிக்கிறது என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

மாநிலச் செய்திகள்
ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை ரத்து:

கால அட்டவணைப்படி இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில், புறநகர் ரயில்கள் சேவை ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை ரத்து என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம்:

பீகாரில் இடி, மின்னல் மற்றும் மழையால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு உத்தரவு:

தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 1,463 கணினி ஆசிரியர்களுக்கு வரும் 2022ஆம் ஆண்டு வரை மூன்றாண்டு பணி நீட்டிப்பு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு தெரிவிப்பு:

மத்திய அரசை பொருத்தவரை பொதுமுடக்கத்தால் மாணவர்களின் கல்வி தடைப்படக்கூடாது என்ற கொள்கையுடன் செயல்படுகிறது என்றும், தற்போது ஆன்லைன் வகுப்புகள் வளர்ந்து வரும் ஒரு கல்வி பயிற்றுவிக்கும் முறையாக மாறி உள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தீவிரமாக ஆலோசனை:

எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு கிரேடு முறையில் தேர்ச்சி வழங்கலாமா? என்பது குறித்து கல்வித்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

மராட்டிய அரசு அறிவிப்பு:

பதஞ்சலி நிறுவன மருந்தை விற்பனைக்கு அனுமதிக்க மாட்டோம் என மராட்டிய அரசு அறிவித்துள்ளது.

மாநில சுகாதாரத்துறை வெளியீடு:

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோயாளிகளுக்கும், முதியவர்களுக்கும் மருத்துவ வழிகாட்டுதல் கையேட்டினை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

மந்திரி சபை கூட்டத்தில் முடிவு:

மராட்டியத்தில் 3 மாதத்திற்கு பிறகு சலூன் கடைகளை வருகிற 28ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளித்து மந்திரி சபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு முடிவு:

சீன மின்பொருட்களின் இறக்குமதியை குறைக்கும் நோக்கில் அவற்றின் மீதான சுங்கவரியை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மாவட்டச் செய்திகள்
கரூரில் 9.8 செ.மீ மழை பதிவு:

கரூரில் நேற்று அதிகபட்சமாக பஞ்சப்பட்டியில் 9.8 செ.மீ மற்றும் மாயனூரில் 7.5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
உலகக்கோப்பை கால்பந்து போட்டி:

2023ஆம் ஆண்டு பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமையை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பெற்றுள்ளன.

Bright Zoom Today News ஜுன் 26 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுன் 26 காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on June 26, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.