Bright Zoom Today News ஜுன் 25 மாலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுன் 25 மாலை நேரச் செய்திகள்


ரூ.1,000 நிவாரணம் வழங்க... தமிழக அரசு அரசாணை வெளியீடு
 - செய்திகள் !

உலகச் செய்திகள்
மோட்டார் சைக்கிள்கள் பயன்பாட்டிற்;கு தடை:

ஆஸ்திரிய தலைநகரும், கேடிஎம் மோட்டார் சைக்கிள் தலைமையகம் அமைந்துள்ள பகுதியுமான வியன்னாவில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மோட்டார் சைக்கிள்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநிலச் செய்திகள்
கனமழைக்கு வாய்ப்பு:

தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி, தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு அரசாணை வெளியீடு:

மதுரையில் 5,39,331 குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணம் வழங்க ரூ.53.93 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ அறிவிப்பு:

10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு எஞ்சியுள்ள தேர்வுகளை ரத்து செய்வதாக சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.

இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவிப்பு:

ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்களை தயாரிப்பது மற்றும் ஏவுதல் போன்ற விண்வெளித்துறை செயல்பாடுகளில் இனி தனியார் துறை அனுமதிக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

ஐ.சி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து:

சி.பி.எஸ்.இ. பொது தேர்வுகளை தொடர்ந்து ஐ.சி.எஸ்.இ. தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ. மாணவர்களின் தேர்ச்சி அடிப்படையில் தங்கள் மாணவர்களும் தேர்ச்சி பெறுவார்கள் என ஐ.சி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை:

தமிழகத்தில் நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்து கடைகள் மூடப்படும் என மருந்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பிரதமருக்கு முதல்வர் நாராயணசாமி கடிதம்:

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.

3,000 பக்தர்களுக்கு அனுமதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் நாளொன்றுக்கு மேலும் 3,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ரத்தவங்கி செயலி அறிமுகம்:

செஞ்சிலுவை சங்கத்தின் இ-பிளட் சர்வீசஸ் செயலியை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் இன்று துவக்கி வைத்தார்.

ஹோட்டல் சங்கம் அதிரடி முடிவு:

டெல்லியில் இனிமேல் சீன நாட்டவருக்கு தங்கும் விடுதிகளில் அறை வழங்கப்பட மாட்டாது என டெல்லி ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மாவட்டச் செய்திகள்
தங்கம் விலை:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.384 குறைந்து ரூ.36,888-க்கு விற்பனையாகிறது.

சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி:

சென்னையில் வீடு வீடாக சென்று மக்கள் உடல்நிலையை ஆய்வு செய்வது தொடர்கிறது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

விளையாட்டுச் செய்திகள்
லா லிகா கால்பந்து போட்டி:

லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி 68 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

Bright Zoom Today News ஜுன் 25 மாலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுன் 25 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on June 25, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.