Bright Zoom Today News ஜுன் 27 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுன் 27 காலை நேரச் செய்திகள்


மதுரையில் இன்று முதல் தொடங்குகிறது... நிவாரணம் வழங்கும் பணி - முக்கியச் செய்திகள் !

உலகச் செய்திகள்
இந்தியாவை சுற்றி வளைக்க திட்டம்:

லடாக்கை தொடர்ந்து ராஜஸ்தானை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையை சீனா குறிவைத்துள்ளது. இதன்மூலம் சீனா, இந்தியாவை சுற்றி வளைக்க திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா வருவதற்கு விசா வழங்கப்படாது:

ஹாங்காங்கிற்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தை இயற்றிய சீனாவின் ஆளும்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியினர் அமெரிக்கா வருவதற்கு விசா வழங்கப்படாது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அறிவித்துள்ளார்.

மாநிலச் செய்திகள்
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்:

மக்களின் பணம் சுருட்டப்படுவதை தடுக்க, கூட்டுறவு வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொதுமுடக்கம் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

வயது வரம்பை தேர்தல் ஆணையம் குறைத்தது:

மக்களவை, சட்டப்பேரவை தேர்தலில் தபால் ஓட்டு போடுபவர்களுக்கான வயது வரம்பு 80ல் இருந்து 65 ஆக தேர்தல் ஆணையம் குறைத்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை தீவிரம்:

அசாமில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதால், பிரம்மபுத்திராவிலும் அதன் துணை ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு பாய்ந்து வருகிறது. இதனால் 16 மாவட்டங்களில் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:

தென்மேற்கு பருவக்காற்று, வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாவட்டச் செய்திகள்
இன்று முதல் தொடங்குகிறது:

மதுரை மாவட்டத்தில் ரூ.1,000 நிவாரணம் வழங்கும் பணி இன்று முதல் தொடங்குகிறது. மதுரையில் 100 மாநகராட்சி பகுதிகள், மதுரை கிழக்கு, மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம், பரவை பேரூராட்சியில் நிவாரணம் வழங்கப்படுகிறது.

ரூ.25 லட்சம் நிதியுதவி:

சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஜூலை 15ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு:

மதுரை, தேனியில் ஜூலை 15ஆம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்
அடுத்த மாதம் 1ஆம் தேதி:

இந்திய பேட்மிண்டன் பயிற்சி முகாமை ஐதராபாத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 1ஆம் தேதி தொடங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

சூப்பர் ஓவர் முறை தேவையில்லை :

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் சூப்பர் ஓவர் முறை தேவையில்லை என்று நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர் கூறியுள்ளார்.

Bright Zoom Today News ஜுன் 27 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுன் 27 காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on June 27, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.