Bright Zoom Today News
ஜுன் 29 காலை நேரச் செய்திகள்
மருத்துவ நிபுணர்களுடன்... தமிழக முதலமைச்சர் ஆலோசனை - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
உலக வங்கி கடன் உதவி:
இந்தியாவில் மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் பள்ளிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த உலக வங்கி 3,700 கோடி ரூபாய் கடன் அளித்துள்ளது.
பொதுமுடக்கம் முற்றிலும் நீக்கம்:
இலங்கையில் இதுவரை அமலில் இருந்த பொதுமுடக்கம் முற்றிலும் நீக்கப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
மாநிலச் செய்திகள்
இன்று முதல் ஜூலை 15ஆம் தேதி வரை ரத்து:
தமிழகத்திற்குள் இயக்கப்பட்டு வந்த 7 சிறப்பு ரயில்கள் இன்று முதல் ஜூலை 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
23 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு:
அசாமில் 23 மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வெள்ளத்தினால் 9 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவ நிபுணர்களுடன்... இன்று ஆலோசனை:
தலைமைச் செயலகத்தில் மருத்துவ குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் மற்றும் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஜூலை 1ஆம் தேதி முதல்:
ராஜஸ்தானில் ஜூலை 1ஆம் தேதி முதல் கிராமப்புறங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஜூலை 6ஆம் தேதி வெளியிட திட்டம்:
பிளஸ்-2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை ஜூலை 6ஆம் தேதி வெளியிட தமிழக பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
சந்தேஷ் வகை இனிப்புகள்:
மேற்குவங்கத்தில் மக்களின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கும் வகையில், சந்தேஷ் வகை இனிப்புகளை சந்தைப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேச ஆளுநராக நியமனம்:
உத்திரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலுக்கு மத்தியப்பிரதேச ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது என குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இன்று முதல் பெறலாம்:
திருப்பதி ஏழுமலையான் விரைவு தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு இன்று வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
விரைவு ரயில்களாக மாற்ற திட்டம்:
தமிழகத்தில் முதற்கட்டமாக, 13 பாசஞ்சர் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
இன்றும், நாளையும் வங்கிகள் செயல்படும்:
சென்னை உட்பட 4 மாவட்டங்களில் 33 சதவீத ஊழியர்களுடன் இன்றும், நாளையும் வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
6 விமானங்கள் ரத்து:
சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் பயணிகள் இல்லாமல் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
விளையாட்டுச் செய்திகள்
நேற்று மான்செஸ்டர் புறப்பட்டனர்:
பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்காக பாகிஸ்தான் வீரர்கள் கராச்சியில் இருந்து நேற்று மான்செஸ்டர் புறப்பட்டனர்.
Bright Zoom Today News ஜுன் 29 காலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
June 29, 2020
Rating:
Reviewed by Bright Zoom
on
June 29, 2020
Rating:


No comments: