ஏழாம் வகுப்பு தமிழ், எங்கள் தமிழ் - நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்.

ஏழாம் வகுப்பு தமிழ்,
எங்கள் தமிழ்
- நாமக்கல் கவிஞர்
வெ. இராமலிங்கனார்.



இயல் 1
கவிதைப்பேழை
எங்கள் தமிழ்
- நாமக்கல் கவிஞர்
வெ. இராமலிங்கனார்.

மனப்பாடபாடல், நூல்வெளி சொல்லும் பொருளும், சரியான விடையைத் தேர்ந்தெடு, நயம் அறிக, குறுவினா, சிறுவினா, சிந்தனை வினா ,கூடுதல் வினா, ஆகிய பல உள்ளடக்கங்களை கொண்டு வெளிவர இருக்கிறது இதை முழுமையாகப் பார்த்து பயனடையுங்கள் 100 % வெற்றி..

https://youtu.be/_F4l6TOoPFQ

மனப்பாடப் பகுதி

எங்கள் தமிழ்

அருள்நெறி அறிவைத் தரலாகும் அதுவே தமிழன் குரலாகும் பொருள்பெற யாரையும் புகழாது போற்றா தாரையும் இகழாது

கொல்லா விரதம் குறியாகக் கொள்கை பொய்யா நெறியாக எல்லா மனிதரும் இன்புறவே என்றும் இசைந்திடும் அன்பறமே அன்பும் அறமும் ஊக்கிவிடும் அச்சம் என்பதைப் போக்கிவிடும் இன்பம் பொழிகிற வானொலியாம் எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்


நூல்வெளி:

இப்பாடலின் ஆசிரியரை, நாமக்கல் கவிஞர் என்றும் அழைப்பர். இவர் தமிழறிஞர், கவிஞர் விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர், காந்தியடிகளின் கொள்கைகள் ஈர்க்கப்பட்டு காந்தியத்தைப் பின்பற்றியதால் இவர் காந்தியக்கவிஞர் என்றும் அழைக்கப்படுகிறார்.

தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர், மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள் என் கதை, சங்கொலி உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்


பாடலின் பொருள் :
நம் தாய்மொழியாம் தமிழ் மொழி, அருள் நெறிகள் நிரம்பிய அறிவைத் தருகிறது.
அதுவே தமிழ் மக்களின் குரலாகவும் விளங்குகிறது. தமிழ் மொழியைக் கற்றோர், பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேச மாட்டார், தம்மை போற்றாதவர்களையும் இகழ்ந்து பேசமாட்டார்.

கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்

நம் தமிழ்மொழி அனைவரிடத்தும் அன்பையும் அறத்தையும் தூண்டும், அஃது அச்சத்தைப் போக்கி இன்பம் தரும். எங்கள் தமிழ்மொழி தேன் போன்ற மொழி ஆகும்.

சொல்லும் பொருளும்

ஊக்கிவிடும் - ஊக்கப்படுத்தும்
விரதம் - நோன்பு
குறி - குறிக்கோள்
பொழிகின்ற - தருகின்ற


#BrightZoom,
ஏழாம் வகுப்பு தமிழ்,
எங்கள் தமிழ் பகுதி - 1
- நாமக்கல் கவிஞர்
வெ. இராமலிங்கனார்.

இயல் - 1,
கவிதைப்_பேழை,
#எங்கள்தமிழ்,
#நாமக்கல்_கவிஞர்,
#வெ_இராமலிங்கனார்,
#மனப்பாடபாடல்,
# நூல்வெளி,
#சொற்பொருள்,
#நூல்_குறிப்பு,
#பொருள்_தருக,
#சரியான_விடையைத்தேர்ந்தெடுத்து_எழுதுக,
# நயம்அறிக,
#பாடநூல்_வினா யூடியூபில் வீடியோவாக பார்க்க லிங்க்

https://youtu.be/_F4l6TOoPFQ






ஏழாம் வகுப்பு தமிழ், எங்கள் தமிழ் - நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார். ஏழாம் வகுப்பு தமிழ்,  எங்கள் தமிழ்  - நாமக்கல் கவிஞர்   வெ. இராமலிங்கனார். Reviewed by Bright Zoom on July 08, 2020 Rating: 5

1 comment:

  1. பதிவுக்கு நன்றி..
    அன்புடையீர்!,
    இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
    #தமிங்கிலம்தவிர்
    #தமிழெழுதிநிமிர்
    #வாழ்க #தமிழ்
    இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
    ÷÷ ழயஙமற

    ReplyDelete

Other Posts

Powered by Blogger.