Bright Zoom Today News
ஜுலை 07 மாலை நேரச் செய்திகள்
மதுரை காவல் ஆணையர் எச்சரிக்கை - முக்கிய செய்திகள் !
உலகச் செய்திகள்
நள்ளிரவிலும் கண்காணிப்பு:
இந்திய-சீன எல்லை அருகே, முன்களப் பகுதியில் இந்தியாவின் அதிநவீன அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள், கனரக சினூக் ஹெலிகாப்டர்கள், மிக்-29 ரக போர் விமானங்கள் நள்ளிரவிலும் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
நாடு திரும்புவோரை கட்டுப்படுத்த நடவடிக்கை:
நியூசிலாந்தில் தனிமைப்படுத்தல் முகாம்கள் நிரம்பியதால், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசு முடிவு:
அமெரிக்க கல்லூரிகளில் அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் முழுவதும் ஆன்லைனில் நடத்தப்பட்டால், வெளிநாட்டு மாணவர்கள் அங்கு தங்கியிருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாயகம் அழைத்து வந்தது இன்போசிஸ் நிறுவனம்:
அமெரிக்காவில் சிக்கிய 206 இந்திய ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை தனி விமானம் மூலம் இன்போசிஸ் நிறுவனம் தாயகம் அழைத்து வந்துள்ளது.
மாநிலச் செய்திகள்
மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்:
தமிழகத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை நிரந்தரமாக தடை செய்வது தொடர்பான புகாரில் தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி 4 வாரத்தில் பதில் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மிதமான மழைக்கு வாய்ப்பு:
காற்றின் திசை வேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில், கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு தெரிவிப்பு:
சரக்கு வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிப்பதன் மூலம் அரசுக்கு 1,724 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு இல்லை:
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பற்றாக்குறை என்பதே இல்லை என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை ஒப்புதல்:
அரியானாவில் 75 சதவீத தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்கே என்ற மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கூகுள் நிறுவனம் அறிவுறுத்தல்:
பயனாளர்களின் தகவல்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்படக்கூடிய 25 ஆப்களை உடனே மொபைலில் இருந்து நீக்க கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
மாவட்டச் செய்திகள்
சிபிஐ ஒப்புதல்:
சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்ட தந்தை, மகன் மரணம் குறித்த வழக்கை விசாரிக்க சிபிஐ ஒப்புதல் அளித்துள்ளது.
காவல் ஆணையர் எச்சரிக்கை:
மதுரையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க நீண்ட தூரம் வாகனங்களில் சென்றால் சட்டப்படி நடவடிக்கை என்றும் அம்மாவட்ட காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
பிறந்தநாள் வாழ்த்து:
எம்எஸ் டோனியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய அணி கேப்டன் விராட் கோலி உட்பட முன்னணி வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி நாளை:
இங்கிலாந்து மண்ணில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை வெல்லும் உத்வேகத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி நாளை களம் இறங்கவுள்ளது.

Bright Zoom Today News ஜுலை 07 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
July 07, 2020
Rating:
No comments: