Bright Zoom TNPSC GK
இந்திய அரசியலமைப்பு
பொது அறிவு வினா விடைகள்!!!
🔥 அரசியலமைப்பு 69-வது சட்டத்திருத்தத்தின் படி, டெல்லியானது தேசியத் தலைநகர் என்ற நிலையைப் பெற்ற ஆண்டு?
- 1991
🔥 மாநில அரசின் நிர்வாகப் பணிகளைப் பற்றிக் குறிப்பிடும் சட்டப்பிரிவுகள்?
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் 152 முதல் 237 வரை உள்ள பிரிவுகள்
🔥 ஆளுநர்களின் நியமனம், தகுதி, அதிகாரம் மற்றும் பணிகள் பற்றி விளக்கும் சட்டப் பிரிவுகள்?
- 153 முதல் 160 வரை உள்ள பிரிவுகள்
முiபெஆயமநசள ஐயுளு யுஉயனநஅல
🔥 ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையைக் கொண்டுள்ள நிர்வாகம் எது?
- மாநில நிர்வாகம்
🔥 எவருடைய தலைமையிலான அமைச்சரவையே உண்மையான நிர்வாக அமைப்பாகும்?
- முதலமைச்சர்
🔥 மாநில ஆளுநரை நியமனம் செய்வது யார்?
- குடியரசுத் தலைவர்
🔥 ஆளுநர், யார் முன்னிலையில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்?
- உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
🔥 சட்டமன்றம் நடைபெறாத சமயங்களில், ஆளுநரால் பிறப்பிக்கப்படும் சட்டங்கள்?
- அவசரச்சட்டங்கள்
🔥 மாநில முதலமைச்சர் யாரால் நியமிக்கப்படுகிறார்?
- ஆளுநர்
🔥 முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம்?
- 5 ஆண்டுகள்
🔥 சட்டப்பேரவைக்கு தலைமை வகிப்பவர் யார்?
- அவைத் தலைவர் அல்லது சபாநாயகர்
🔥 சபாநாயகர் இல்லாத நாட்களில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நடத்துவது யார்?
- துணை சபாநாயகர்
🔥 மாநிலங்களில் ------------ உண்மையான அதிகார மையமாகத் திகழ்கிறது.
- சட்டப்பேரவை
🔥 தமிழ்நாட்டில், சட்ட மேலவை எந்த ஆண்டு ஒழிக்கப்பட்டது?
- 1986
Bright Zoom TNPSC GK இந்திய அரசியலமைப்பு பொது அறிவு வினா விடைகள்!!!
Reviewed by Bright Zoom
on
July 15, 2020
Rating:
No comments: