Bright Zoom TNPSC GK பொது அறிவு வினா விடைகள்!!!

Bright Zoom TNPSC GK
பொது அறிவு வினா விடைகள்!!!

👉 உலகில் மிக வேகமாக வளரும் கடல்பாசி எது? - கலிபோர்னியா இராட்சத கெல்ப்

👉 அயோடின் ----------- எனப்படும் பழுப்புப் பாசியிலிருந்து பெறப்படுகிறது.
 - லேமினேரியா

👉 முதன் முதலில் நீரிலிருந்து வெளிவந்து நிலத்தில் வாழ்வதற்கான தகவமைப்பினைப் பெற்ற தாவர வகை எது?
 - பிரையோபைட்டுகள்

👉 வாஸ்குலர் கற்றையைப் பெற்று முதன் முதலில் நிலத்தில் வாழும் திறனைப் பெற்ற பூவாத்தாவரங்கள்-------ஆகும்.

 - பெரணிகள் அல்லது டெரிடோபைட்டுகள்

👉 மருத்துவ உலகை வியக்கச் செய்த அதிசய மருந்தான பெனிசிலினைக் கண்டுபிடித்தவர்?

 - அலெக்ஸாண்டர் பிளெம்மிங்

👉 ஒரு தொடக்க நிலையிலுள்ள பருப்பொருளைச் சிறிய பொருளாக உடைக்க முடியாதோ அது தனிமமாகும் இது யாருடைய கூற்று?
 - லாவாய்சியர்

👉 ஒரு தூய பொருளை இயற்பியல் அல்லது வேதியியல் முறையினால் மேலும் பிரிக்க முடியாதோ அப்பொருளே தனிமமாகும் இது யாருடைய கூற்று?
 - பாயில்

👉 வைரத்தின் முனையைக் கொண்டு வெட்ட முடியாத பொருளைக் கூட உயரிய வாயுவான ------- லேசரைப் பயன்படுத்தி வெட்டமுடியும்.
- செனான்

👉 பன்னாட்டு அலகு முறையில் விசையின் அலகு -------- ஆகும்.
- நியூட்டன்

👉 தொடுவதன்மூலம் ஒரு பொருளின்மீது விசையை செலுத்தி, அதன் இயக்க நிலையில் மாற்றத்தினை ஏற்படுத்தம் விசையை -------- என்கிறோம்.
- தொடுவிசை

👉 வளிமண்டல அழுத்தத்தை அளக்கப் பயன்படும் கருவி எது?
- பாராமானி

👉 ஒரு கலனில் உள்ள காற்றை வெளியேற்றும் பம்பை கண்டுபிடித்தவர்?
- ஆட்டோவான் குருக்கே

👉 இரண்டு பரப்புகள் ஒன்றன் மீது மற்றொன்று நகரும் போதோ நகர முற்படும் போதோ உருவாகும் விசை --------- எனப்படும்.
- உராய்வு விசை

👉 மின்னூட்டம் பெற்ற ஒரு பொருள் மின்னூட்டம் பெற்ற அல்லது மின்னூட்டமற்ற மற்றொரு பொருளின்மீது செயல்படுத்தும் விசை -------- எனப்படும்.
- நிலை மின்னியல் விசை

Bright Zoom TNPSC GK பொது அறிவு வினா விடைகள்!!! Bright Zoom TNPSC GK  பொது அறிவு வினா விடைகள்!!! Reviewed by Bright Zoom on July 15, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.