Bright Zoom Today News
ஜுலை 08 மாலை நேரச் செய்திகள்
இலவச சிலிண்டர் வழங்கும் திட்டம்... மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு - செய்திகள் !
உலகச் செய்திகள்
சீன ராணுவம் வெளியேறியது:
லடாக் எல்லையிலிருந்து சீன ராணுவம் வெளியேறிய நிலையில், தற்காலிக கட்டுமானங்கள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன என்பது செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதியாகி உள்ளது.
மாநிலச் செய்திகள்
புதிய வலைதளத்தை தொடங்கி வைத்தார்-முதல்வர்:
தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால், வைப்பீட்டாளர்கள் நலனிற்காக அதன் செயல்பாடுகளை ஆன்லைன் மூலமாக செயல்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள
http://tnpowerfinance.com என்ற புதிய வலைதளம் மற்றும் TNPFCL என்ற கைப்பேசி செயலியை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
ஜூலை 13ஆம் தேதிக்குப் பிறகு ஆன்லைன் வகுப்புகள்:
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகள் மூலம் நடத்தப்படும் வகுப்புகளை ஜூலை 13ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
3 மாதங்களுக்கு நீட்டிக்க ஒப்புதல்:
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தடை:
தமிழகம் முழுவதும் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
5 புதிய பால் பொருட்களை தொடங்கி வைத்தார்-முதல்வர்:
ஆவின் நிறுவனத்தின் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 5 புதிய பால் பொருட்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.
முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்:
தமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
தமிழகம், புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு:
தமிழகம், புதுவையில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 75.01 சதவீதமாக பதிவாகியுள்ளது.
மாவட்டச் செய்திகள்
நாளை முதல் வரும் 19ஆம் தேதி வரை:
சிவகாசியில் செயல்படும் பட்டாசு ஆலைகள் நாளை முதல் வரும் 19ஆம் தேதி வரை மூடப்படுவதாக தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
டாஸ் போடுவதில் தாமதம்:
சவுத்தாம்ப்டன் நகரில் இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழை பெய்வதால் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Bright Zoom Today News ஜுலை 08 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
July 08, 2020
Rating:
No comments: