Bright Zoom Today News
ஜுலை 09 காலை நேரச் செய்திகள்
தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படாது.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
அதிபர் டிரம்ப் எச்சரிக்கை:
அமெரிக்காவில் பள்ளிகளை திறக்காவிடில், மாகாணங்களுக்கான நிதி துண்டிக்கப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
மாநிலச் செய்திகள்
அக்டோபர் 20ஆம் தேதி வரை:
பொறியியல் தொழில்நுட்பக் கல்வி படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை, செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று AICTE உத்தரவிட்டிருந்த நிலையில், அக்டோபர் 20ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து AICTE
உத்தரவிட்டுள்ளது.
வருகின்ற ஜூலை 13ஆம் தேதி:
அரசு பள்ளி மாணவர்களுக்கு வருகின்ற ஜூலை 13ஆம் தேதி பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பிற்பகல் 1.30 மணிக்கு உரை:
மூன்று நாள் இந்திய குளோபல் வாரத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 1.30 மணிக்கு உரை நிகழ்த்துகிறார்.
டி.வி. மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும்:
தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படாது, டி.வி. மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
89 மொபைல் செயலிகளை பயன்படுத்த ராணுவத்தினருக்கு தடை:
ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பேஸ்புக், இன்ஸ்டாகிரம் உள்ளிட்ட 89 மொபைல் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என இந்திய ராணுவம் வலியுறுத்தி உள்ளது.
இன்ஸ்டாகிராம் செயலியில் புதிய வசதி:
டிக்டாக் போன்று வீடியோக்களை பதிவேற்றம் செய்யக்கூடிய புதிய வசதி, சோதனை முறையில் இன்ஸ்டாகிராம் செயலியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு:
பல்கலைக்கழகத்தேர்வு, NEET, JEE தேர்வுகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்:
அரசு பணிகளில் 27மூ ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மாவட்டச் செய்திகள்
வாகனங்கள் செல்ல தடை:
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் நகருக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தானியங்கி உடல் வெப்ப பரிசோதனை கருவி:
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய அமைக்கப்பட்ட தானியங்கி கருவியை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் தொடங்கி வைத்தார்.
விளையாட்டுச் செய்திகள்
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி தெரிவிப்பு:
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இல்லாமல் இந்த ஆண்டை நிறைவு செய்ய விரும்பவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

Bright Zoom Today News ஜுலை 09 காலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
July 09, 2020
Rating:
No comments: