Bright Zoom Today News ஜுலை 09 மாலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுலை 09 மாலை நேரச் செய்திகள்


10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்... சிபிஎஸ்இ அறிவிப்பு - செய்திகள்..!!

உலகச் செய்திகள்
கிராமங்களுக்கு இணைய வசதி:

கென்யா நாட்டில் பிரம்மாண்ட பலூன்களின் மூலம் கிராமங்களுக்கு இணைய வசதி தரும் புதுமையான திட்டத்தை ஆல்ஃபாபெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

நாய் இறைச்சி விற்பதற்கு தடை:

கம்போடியாவில், உலகப்புகழ் பெற்ற அங்கோர் வாட் ஆலயம் அமைந்துள்ள சியெம் ரீப் மாகாணத்தில் நாய் இறைச்சி விற்பதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இங்கிலாந்து அரசு அதிரடி சலுகை:

இங்கிலாந்தில் எந்த ஹோட்டலில் சாப்பிட்டாலும் 50 சதவீத தள்ளுபடி என இங்கிலாந்து அரசு அதிரடி சலுகையை அறிவித்து உள்ளது.

மாநிலச் செய்திகள்
வரும் 27ஆம் தேதி தேர்வு :

மார்ச் 24ஆம் தேதி தேர்வு எழுத முடியாத பிளஸ்-2 மாணவர்களுக்கு வரும் 27ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ அறிவிப்பு:

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 11ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 13ஆம் தேதியும் வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி உரை:

இந்தியா குளோபல் வீக் 2020 நிகழ்ச்சி தொடக்க விழாவில் டெல்லியில் இருந்தபடியே காணொளி காட்சியின் மூலம் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அடுத்த 24 மணி நேரத்தில்:

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

காவல்துறையின் அனுமதி கட்டாயம்:

ஒடிசா மாநிலத்தில் திருமணம், இறுதிசடங்கு ஆகியவற்றிற்கு காவல்துறையின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பெயர் கட்டாயம்:

ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில், தயாரிக்கப்படும் நாட்டின் பெயரைக் கட்டாயமாகக் குறிப்பிட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கட்டணம் பெற்றுக்கொள்ள அனுமதிக்க முடிவு-தமிழக அரசு:

தனியார் கல்லூரிகள் மூன்று தவணைகளாகக் கட்டணம் பெற்றுக்கொள்ள அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

3 சேனல்கள் ஒப்புதல்:

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த 3 சேனல்கள் இதுவரை ஒப்புதல் தெரிவித்திருப்பதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
வர்த்தக நிறுவனங்கள் இயங்க தடை:

தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் ஜூலை 12ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை வர்த்தக நிறுவனங்கள் இயங்க தடை விதித்து நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

உலக கிரிக்கெட்டிற்கு ஆரோக்கியம்-ஜஸ்டின் லாங்கர்:

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி செப்டம்பர் மாதம் இங்கிலாந்து சென்று விளையாடுவது உலக கிரிக்கெட்டிற்கு ஆரோக்கியம் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.



Bright Zoom Today News ஜுலை 09 மாலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுலை 09 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on July 09, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.