Bright Zoom Today News ஜுலை 10 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுலை 10 காலை நேரச் செய்திகள்



10 சதவீத பணியாளர்களுடன் ஐடி நிறுவனங்கள் இயங்க... தமிழக அரசு அனுமதி - செய்திகள்..!!



உலகச் செய்திகள்
இந்திய செய்தி சேனல்களுக்கு தடை:

நேபாள நாட்டில் நேற்று மாலையில் இருந்து இந்திய செய்தி சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தூர்தர்ஷனை தவிர மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

சிங்கப்பூரில் இன்று பொதுத் தேர்தல்:

சிங்கப்பூரில் இன்று பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. அந்நாட்டில் 26.5 லட்சம் மக்கள் வாக்களிக்க உள்ளனர்.
மாநிலச் செய்திகள்
தகவல்கள் உண்மையில்லை:

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூலை 11ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 13ஆம் தேதியும் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகின. அந்த தகவல்கள் உண்மையில்லை என்று சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.

தமிழக அரசு அனுமதி:

பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஐடி நிறுவனங்கள், அவர்கள் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் சென்று 10 சதவீத பணியாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு:

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு உத்தரவு:

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு வருவாய், சொத்து சான்றிதழ் வழங்கலாம் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பு:

கேரளாவில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பால் விசாரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.

3,000த்திற்கும் மேற்பட்டவர்கள் சொந்த ஊர் சென்றனர்:

சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோத்பூர் மற்றும் மேற்கு வங்கத்திற்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில் மூலம் 3,000த்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய சொந்த மாநிலத்திற்கு நேற்று புறப்பட்டு சென்றனர்.

5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு:

கர்நாடக கடலோர மாவட்டங்களில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இன்று 115 மில்லி மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாவட்டச் செய்திகள்
இணையத்தின் மூலம் பதிவு சான்றிதழ் பெறலாம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரையறைகளை மத்திய அரசு மாற்றிய நிலையில், இணையத்தின் மூலம் பதிவு சான்றிதழ் பெறலாம் என ஆட்சியர் கொ.வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுச் செய்திகள்
ஷோபி டெவின் நியமனம்:

நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் முழுநேர கேப்டனாக ஷோபி டெவின் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி:

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 204 ரன்களில் ஆல்அவுட் ஆனது.

Bright Zoom Today News ஜுலை 10 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுலை 10 காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on July 10, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.