Bright Zoom Today News
ஜுலை 17 காலை நேரச் செய்திகள்
கல்லூரிகளில் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு.. வரும் 20ஆம் தேதி துவங்குகிறது - செய்திகள் !
உலகச் செய்திகள்
அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுக்கு விமான சேவை:
அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுக்கு இடைக்கால அடிப்படையில் கட்டுப்பாடுகளுடன் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்துள்ளார்.
விண்கலத்தை ஏவும் தேதி ஒத்திவைப்பு:
ஐக்கிய அரபு குடியரசு நாடுகளின் சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கான விண்கலத்தை ஏவும் தேதி வரும் 22ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் திறக்க அனுமதி:
சீனாவில் சினிமா தியேட்டர்கள் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று பிரதமர் மோடி உரை:
நியூயார்க் நகரில் இருந்து செயல்படும் ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக சபை உயர்மட்ட கூட்டத்தில் இன்று பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
மாநிலச் செய்திகள்
ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல்:
சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை மற்றும் பணம் கையாளும் கட்டணத்தை வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் உயர்த்த வங்கிகள் முடிவு செய்துள்ளன.
வருகின்ற 20ஆம் தேதி முதல்:
தமிழகத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரிகள் மற்றும் அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு வரும் 20ஆம் தேதி துவங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு அரசாணை வெளியீடு:
திரைப்பட தொழிலாளர்களுக்கு 3வது முறையாக தமிழக அரசு ரூ.1,000 நிதியுதவி வழங்கியுள்ளது. சென்னை உட்பட 4 மாவட்டங்களிலுள்ள 9,882 பேருக்கு ரூ.1,000 நிதியுதவி அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இன்று முதல் 14 நாட்களுக்கு...:
ஒடிசாவிலுள்ள நான்கு மாவட்டங்களில் இன்று முதல் 14 நாட்களுக்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்புத்துறை மந்திரி... லடாக் சுற்றுப்பயணம்:
லடாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.
இ-சஞ்சீவினி திட்டம்:
இணையவழியே மருத்துவ ஆலோசனைகளைப் பெறும் இ-சஞ்சீவினி திட்டத்தின் கீழ் இதுவரை 6,471 பேர் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
மின்தடை அறிவிப்பு:
சென்னையின் புறநகர்ப் பகுதிகளின் சில இடங்களில், நாளை (ஜூலை 18) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன:
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் நேற்று (வியாழக்கிழமை) வழங்கப்பட்டன.
விளையாட்டுச் செய்திகள்
இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று ஆலோசனை:
ஐ.பி.எல். மற்றும் உள்;ர் கிரிக்கெட் போட்டிகளை தொடங்குவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
2-வது டெஸ்ட் போட்டி:
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்களை குவித்துள்ளது.
Bright Zoom Today News ஜுலை 17 காலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
July 17, 2020
Rating:
No comments: