Bright Zoom Today News ஜுலை 17 மாலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுலை 17 மாலை நேரச் செய்திகள்


40% கல்விக் கட்டணம் வசூல் செய்யலாம்... உயர்நீதிமன்றம் உத்தரவு - செய்திகள் !

உலகச் செய்திகள்
அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவிப்பு:

இந்திய-சீன மக்களிடையே அமைதியை நிலைநாட்ட, சாத்தியமான  அனைத்தையும் செய்ய விரும்புவதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.


மாநிலச் செய்திகள்
அடுத்த 24 மணி நேரத்தில்...:

தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்றில் ஏற்பட்டுள்ள திசை வேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது:

தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என்று ஈரோட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

40 சதவீத கல்விக் கட்டணத்தை வசூல் செய்யலாம்:

தனியார் பள்ளிகள் 40 சதவீத கல்விக் கட்டணத்தை வசூல் செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிகள் திறந்த பிறகு மேலும் 35 சதவீத கல்விக் கட்டணத்தை வசூலிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 20ஆம் தேதி முதல்:

தமிழ்நாட்டிலுள்ள தனியார் பள்ளிகள், கட்டண நிர்ணயம் செய்வதற்குரிய விண்ணப்பங்களை வரும் 20ஆம் தேதி முதல் சமர்ப்பிக்கலாம் என தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழு அறிவித்துள்ளது.

ராமர் கோவில்.. பூமி பூஜையில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு:

உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

எவ்விதமான தளர்வுகளும் வழங்கப்பட மாட்டாது:

தமிழகத்தில் திரையரங்குகள், வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபம் ஆகியவற்றுக்கு தற்போது எவ்விதமான தளர்வுகளும் வழங்கப்பட மாட்டாது என அமைச்சர் கடம்பூர் ராஜு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மாவட்டச் செய்திகள்
புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.. முதலமைச்சர்:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று ஈரோடு மாவட்டத்தில் 151 கோடி ரூபாய் மதிப்பீட்டில், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விளையாட்டுச் செய்திகள்
லா லிகா அணி சாம்பியன்:

லா லிகா அணியின் வீரர் பென்ஜிமா இரண்டு கோல்கள் அடித்ததால், ரியல் மாட்ரிட் வில்லாரியல் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 34-வது முறையாக லா லிகா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

Bright Zoom Today News ஜுலை 17 மாலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுலை 17 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on July 17, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.