Bright Zoom Today News ஜுலை 21 மாலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுலை 21 மாலை நேரச் செய்திகள்


N-95 ரக முகக்கவசங்களை பொதுமக்கள் பயன்படுத்தக்கூடாது - செய்திகள் !!

உலகச் செய்திகள்
தென்கொரியா தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்த ராக்கெட்:

தென்கொரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான அனாசிஸ்-2 உடன் ஃபால்கன் 9 ராக்கெட்டை ஸ்பேஸ் எக்ஸ் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

மாநிலச் செய்திகள்
நிவாரணம் வழங்க வாய்ப்பில்லை:

நலவாரியத்தில் பதிவு செய்யாத மற்றும் உறுப்பினர் அட்டையை புதுப்பிக்காத தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வாய்ப்பில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து:

பிரதமர் அலுவலக இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அமுதாவிற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் ஆணை:

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதி பருவ தேர்வுகளை நடத்த தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கில் இரண்டு வாரத்தில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டம்:

வீடுகளுக்கே நேரடியாக ரேஷன் பொருட்களை கொண்டு சென்று வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம்தான் அனுமதி வழங்க வேண்டும்... இந்திய மருத்துவ கவுன்சில்:

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி உச்சநீதிமன்றம்தான் முடிவெடுக்கும் என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

இன்று மாலை அவசர அமைச்சரவைக் கூட்டம்:

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் இன்று மாலை அவசர அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

N-95 ரக முகக்கவசங்களை பொதுமக்கள் பயன்படுத்தக்கூடாது:

அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுகாதாரத்துறையின் பொது சுகாதார சேவை இயக்குனரகம் சுற்றறிக்கையை அனுப்பி வைத்துள்ளது. அதில் சுவாச சுத்திகரிப்பு வால்வுகள் வைத்து தைக்கப்பட்டுள்ள N-95 ரக முகக்கவசங்களை பொதுமக்கள் பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மனோதர்பன் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார் ரமேஷ் பொக்ரியால்:

மாணவர்களின் மன நலனை காக்க மனோதர்பன் என்ற திட்டத்தை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தொடங்கி வைத்தார். ஆரோக்கியமான மன அழுத்தங்கள் இல்லாத வாழ்க்கை முறையை உருவாக்க மனோதர்பன் திட்டத்தில் சேர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாவட்டச் செய்திகள்
மிதமான மழை பெய்ய வாய்ப்பு:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கரூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விளையாட்டுச் செய்திகள்
மத்திய அரசிடம் பிசிசிஐ கோரிக்கை:

ஐ.பி.எல்.போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி தருமாறு மத்திய அரசிடம் பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளது.

Bright Zoom Today News ஜுலை 21 மாலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுலை 21 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on July 21, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.