Bright Zoom Today News
ஜுலை 21காலை நேரச் செய்திகள்
விவசாயிகளுக்கு ரூ.2,500 ஊக்கத்தொகை... தமிழக அரசு அறிவிப்பு - செய்திகள் !
உலகச் செய்திகள்
ஒப்பந்தங்கள் ரத்து:
சீனாவுடனான மோதல் மற்றும் பிரதமர் மோடியின் உள்நாட்டு உற்பத்தி என்ற அழைப்பினை தொடர்ந்து இந்திய மின்சார உபகரணங்கள் உற்பத்தி மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் சீனாவிற்கு வழங்கிய ஒப்பந்தங்களை ரத்து செய்து வருகின்றன.
மாநிலச் செய்திகள்
பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்:
நடப்பு கல்வியாண்டில், பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருவதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது.
இன்று முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை:
திருப்பதியில் இன்று முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக சித்தூர் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ரூ.2,500 ஊக்கத்தொகை:
தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2,500 ஊக்கத்தொகை வழங்கப்பட இருப்பதாகவும், இதற்காக உழவன் செயலி மூலம் பதிவு செய்யலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
குறைந்த அளவே மின் கட்டணம் வசூலிப்பு... அமைச்சர் தெரிவிப்பு:
கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களைவிட தமிழகத்தில் குறைந்த அளவே மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
மிகவும் அரிதான வானியல் நிகழ்வு:
மிகவும் அரிதான வானியல் நிகழ்வாக வரும் சில நாட்களில், உலகின் பல்வேறு பகுதிகளில் ஐந்து கோள்களை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று ஆந்திர மாநில விஞ்ஞானி பி.ஜி.சித்தார்த் தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி:
முத்தூட் பைனான்ஸ் லிமிடெட், அதன் குழுவான முத்தூட் எம் ஜார்ஜ் அறக்கட்டளை சார்பில், முத்தூட் விவாஹசம்மானம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2020 ஆகஸ்ட் - டிசம்பர் மாதங்களுக்கு இடையில் திருமணம் செய்யும், பொருளாதாரத்தில் பின்தங்கிய விதவை தாய்மார்களின் மகள்கள் 20 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முத்தூட் பைனான்ஸ் லிமிடெட் அறிவித்துள்ளது.
முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு... 6 மாத சிறை தண்டனை:
முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாத தனிநபர் மற்றும் நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கும் 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேற்று அறிவித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது கட்டாயம்:
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பயிற்சி முகாமில் பங்கேற்க தொடர்ந்து அனுமதிக்கப்படுவார்கள். அதே சமயம், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விதிமுறைகளை அவர்கள் பின்பற்ற வேண்டியது கட்டாயம் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி:
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
உலக கோப்பை டி20 போட்டித் தொடர் ஒத்திவைப்பு:
ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதாக இருந்த ஐசிசி ஆண்கள் உலக கோப்பை டி20 போட்டித் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Bright Zoom Today News ஜுலை 21காலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
July 21, 2020
Rating:
No comments: