Bright Zoom Today News ஜுலை 22 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுலை 22 காலை நேரச் செய்திகள்


டிசம்பர் 31ஆம் தேதி வரை அனுமதி.. மத்திய தொலைதொடர்புத்துறை.. - செய்திகள்..!!


உலகச் செய்திகள்
ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல்... விமான சேவை:

4 மாதங்களுக்கு பிறகு நேபாளத்தில் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் விமான சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
டிசம்பர் 31ஆம் தேதி வரை.. அனுமதி:

தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் பிபிஓ நிறுவன ஊழியர்கள் டிசம்பர் 31ஆம் தேதி வரை, வீட்டிலிருந்தபடியே பணிபுரிய மத்திய தொலைதொடர்புத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

மத்திய அரசு திட்டம்:

பாங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் யூகோ வங்கி உட்பட 6 வங்கிகளில் உள்ள பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசு எச்சரிக்கை:

தடை செய்யப்பட்ட டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் தொடர்ந்து செயல்பட்டால், அந்நிறுவனங்களின் மீது தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை:

பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புகளில் சேர றறற.டி-ர.யஉ.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், நுழைவுத்தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 1ஆம் தேதி.. பக்ரீத் பண்டிகை:

தமிழகத்தில் நேற்று பிறை தென்படாத காரணத்தால் ஆகஸ்ட் 1ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி சலாஹீத்தீன் அய்யூபி அறிவித்துள்ளார்.

இனிமேல் பொதுமுடக்கம் கிடையாது:

பெங்க;ரு உட்பட கர்நாடகாவில் எங்குமே இனிமேல் பொதுமுடக்கம் கிடையாது என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.

இரு அவசரச் சட்டம்.. மத்திய அரசு அரசாணையில் வெளியீடு:

வேளாண் விளைபொருட்களை தடையில்லாமல் சந்தைப்படுத்துவதற்கு வழிகோலும் இரு அவசரச் சட்டங்களை மத்திய அரசு அரசாணையில் வெளியிட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
8 நாட்கள் பொதுமுடக்கம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி பகுதியில் வருகின்ற ஜுலை 24ஆம் தேதி முதல் ஜுலை 31ஆம் தேதி வரை 8 நாட்கள் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
டெஸ்ட் கிரிக்கெட் ஆல்-ரவுண்டர்கள் தரவரிசை:

டெஸ்ட் கிரிக்கெட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி.. செப்டம்பர் மாதம் நடைபெறும்:

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என ஐ.பி.எல். நிர்வாகக்குழு தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

Bright Zoom Today News ஜுலை 22 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுலை 22 காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on July 22, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.