Bright Zoom Today News
ஜுலை 22 மாலை நேரச் செய்திகள்
தமிழக அரசு இணையதளத்தில்... 6,000 வேலைகளுக்கான அறிவிப்பு - செய்திகள் !
உலகச் செய்திகள்
சுனாமி எச்சரிக்கை:
அமெரிக்காவிலுள்ள அலாஸ்காவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் எல்லை நோக்கி நகரும் வெட்டுக்கிளிகள்:
இந்தியா-பாகிஸ்தான் எல்லை நோக்கி வெட்டுக்கிளி கூட்டம் படையெடுத்து வர வாய்ப்பு உள்ளதாக ஐ.நா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாநிலச் செய்திகள்
6000 வேலைகளுக்கான அறிவிப்பு வெளியீடு:
தனியார் துறையில் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு 3 வாரங்களுக்கு முன்னர் துவக்கிய தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் 6000 வேலைகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழர்களை அழைத்து வர தமிழகத்திற்கு 58 விமானங்கள் இயக்கப்பட உள்ளது:
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர 58 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வருகின்ற 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை தமிழகத்திற்கு 58 விமானங்கள் இயக்கப்பட உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ராமர் கோவில்.. பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்:
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவுள்ளார்.
தமிழக அரசு தெரிவிப்பு:
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பில் நடக்கும் முறைக்கேட்டை விசாரிக்க 8 வாரத்தில் நடுவர் நியமிக்கப்படுவர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அனைத்து பள்ளிகளையும் திறக்க திட்டம்:
ஆந்திராவில் அனைத்து பள்ளிக்கூடங்களையும் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் திறக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்:
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 3 காவலர்களுக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு:
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, தருமபுரி, சேலம் மற்றும் கோவை ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம்.. மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்:
சென்னைக்கு வர விரும்பும் நபர்கள் முறையான ஆவணங்களுடன் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படும்:
இங்கிலாந்து தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படும் என்று அந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை:
இங்கிலீஷ் பிரிமீயர் லீக், லா லிகா மற்றும் சீரி ஏ என மூன்று லீக்குகளிலும் 50 கோல்களுக்கு மேல் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை படைத்துள்ளார்.

Bright Zoom Today News ஜுலை 22 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
July 22, 2020
Rating:
No comments: