Bright Zoom Today News ஜுலை 23 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுலை 23 காலை நேரச் செய்திகள்


கல்லூரி பருவத் தேர்வுகள் ரத்து... தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு - செய்திகள் !

உலகச் செய்திகள்
அமெரிக்க அரசு உத்தரவு:

ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகம் உளவு வேலையில் ஈடுபட்டதால் 72 மணி நேரத்தில் மூட உத்தரவிட்டுள்ளோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஓராண்டை நிறைவு செய்த சந்திரயான்-2:

நிலவை ஆராய இந்தியா அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு ஓராண்டை நிறைவு செய்துள்ளது.

மாநிலச் செய்திகள்
பருவத் தேர்வுகள் ரத்து:

இறுதியாண்டு பருவத் தேர்வுகள் தவிர அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இந்த பருவத்திற்கான தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இன்று மதியம் 2 மணி முதல்:

மணிப்பூர் மாநிலம் முழுவதும் இன்று முதல் அடுத்த 14 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. இன்று மதியம் 2 மணி முதல் முழு பொதுமுடக்கம் அமலுக்கு வருகிறது.

மதிப்பெண் பட்டியல் விநியோகம்:

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு நாளை முதல் ஜூலை 30ஆம் தேதி வரை மதிப்பெண் பட்டியல் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் இயக்ககம் தெரிவிப்பு:

தழிமகத்தில் 12ஆம் வகுப்பு சான்றிதழை ஜூலை 30ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்று தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. சூழல் சரியானவுடன், பள்ளிகளுக்கு சென்று சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது.

பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள்:

பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு தெரிவிப்பு:

தமிழகத்தில் 70 சதவீத மானியத்துடன், சூரிய சக்தி பம்புசெட்கள் திட்டத்தில் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா ஒப்புதல்:

ஊழியர்களை 6 மாதம் முதல் 2 ஆண்டுகளுக்கு ஊதியமின்றி கட்டாய விடுப்பில் அனுப்பும் திட்டத்திற்கு ஏர் இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.

மாவட்டச் செய்திகள்
வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி முழு கொள்ளளவான 47.50 கன அடியை எட்டியது.

தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்:

ஈரோடு மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

விளையாட்டுச் செய்திகள்
உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு உத்தரவு:

சர்வதேச தரத்தில் இயங்காததால் தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்புக்கு மேலும் 6 மாத கால தடையை நீட்டித்து உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டி தள்ளிவைப்பு:

ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு அடுத்த ஆண்டு (2021) ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Bright Zoom Today News ஜுலை 23 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுலை 23 காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on July 23, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.