Bright Zoom Today News ஜுலை 24 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுலை 24 காலை நேரச் செய்திகள்

மறுகூட்டலுக்கு மாணவர்கள்... இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - செய்திகள் !!


உலகச் செய்திகள்
டிசம்பர் 31ஆம் தேதி வரை தடை:

பாதுகாப்புத் துறைகளில் சீனாவின் வர்த்தகத்திற்கு இந்தியா டிசம்பர் 31ஆம் தேதி வரை தடை விதித்துள்ளது.

ஐ.நா. வரலாற்றில் முதல் முறையாக...:

ஐ.நா. வரலாற்றில் முதல் முறையாக உலக தலைவர்களின் நேரடி பங்கேற்பு இல்லாமல் பொதுச்சபை கூட்டம் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ளது.
மாநிலச் செய்திகள்

2 புதிய விழிப்புணர்வு படங்கள் வெளியீடு:

பீடி, சிகரெட் போன்ற புகையிலை பொருட்களின் மேல் பயன்படுத்தப்படும் 2 புதிய விழிப்புணர்வு படங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

முதுநிலை பல் மருத்துவத் தேர்வுகள் ஒத்திவைப்பு:

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது:

தமிழகத்தில் முதலீடுகளை செய்ய விரும்பும் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

மராட்டிய மாநில அரசு உத்தரவு:

மராட்டியத்தில் மழலையர் வகுப்புகள் முதல் 12ஆம் வகுப்பு வரை ஆன்லைனில் பாடம் நடத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்:

பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தேசிய பண பரிவர்த்தனை கழகம் அறிமுகம்:

மாதாந்திர மொபைல் பில், இஎம்ஐ உட்பட குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளை தானியங்கி முறையில் யுபிஐ பரிவர்த்தனையில் மேற்கொள்ளும் வசதியை, தேசிய பண பரிவர்த்தனை கழகம் அறிமுகம் செய்துள்ளது.

10 சதவீத இடஒதுக்கீடு:

பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தில், ஆண்டிற்கு 8 லட்சம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் உள்ளவர்கள் இந்த சலுகையைப் பெற தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரக்கன்றுகள் நடும் திட்டம்:

மத்திய நிலக்கரி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார்.
மாவட்டச் செய்திகள்
துணை ஆட்சியர்களுக்குப் பணி நியமன உத்தரவு:

அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்ட துணை ஆட்சியர்களுக்குப் பணி நியமன உத்தரவுகளை தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

பக்தர்கள் இன்றி தங்கத்தேர் இழுக்க அனுமதி:

விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வளாகத்தில் இன்று, பக்தர்கள் இன்றி தங்கத்தேர் இழுக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி அனுமதியளித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
365 நாள் கவுண்டவுன்:

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான 365 நாள் கவுண்டவுன் நேற்று தொடங்கி உள்ளது.

கடைசி டெஸ்ட் போட்டி:

இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்குகிறது. 
Bright Zoom Today News ஜுலை 24 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News ஜுலை 24 காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on July 24, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.