Bright Zoom News
ஜுலை 24 மாலை நேரச் செய்திகள்
சுதந்திர தினம் கொண்டாட... வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு - முக்கியச் செய்திகள் !!
உலகச் செய்திகள்
அமெரிக்க செனட் சபை கமிட்டி ஒப்புதல்:
அமெரிக்க அரசு சாதனங்களில் டிக் டாக் செயலி பயன்படுத்த தடை விதிக்கும் மசோதாவிற்கு அமெரிக்க செனட் சபை கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
மத்திய அரசு வழிமுறைகளை வெளியிட்டது:
வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்கான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
ஆக்சிஜன் வசதிகளை மேம்படுத்த ரூ.76.50 கோடி ஒதுக்கீடு:
தமிழகம் முழுவதும் தாலுக்கா அளவில் ஆக்சிஜன் வசதிகளை மேம்படுத்த ரூ.76.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு:
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல்... பள்ளிக்கல்வித்துறை விளக்கம்:
ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என வெளியான செய்தி தவறு என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. மாணவர் சேர்க்கை நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செயலாளராக ராஜேஷ் பூஷன் நியமனம்:
மத்திய சுகாதாரத்துறை செயலாளராக உள்ள பீரித்தி சுதன், இம்மாதத்துடன் ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய சுகாதாரத்துறை செயலாளராக ராஜேஷ் பூஷன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கியூஆர் குறியீடுகளை அறிமுகப்படுத்தும் பணி:
முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை மொபைலில் எளிதில் பெற 12 ரயில் நிலையங்களுக்கு என கியூஆர் குறியீடுகளை அறிமுகப்படுத்தும் பணியை வடமேற்கு ரயில்வே துவங்கியுள்ளது.
தேர்தல் ஆணையம் முடிவு:
காலியாக உள்ள சட்டமன்ற மற்றும் மக்களவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
லடாக்கில் மத்திய பல்கலைக்கழகம்:
லடாக்கில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இடமாற்றம்:
தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் 10-க்கும் மேற்பட்ட பி.ஆர்.ஓ.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டச் செய்திகள்
வரும் 27ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம்:
மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 27ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
தேர்தல் நடத்த வாய்ப்பில்லை... சத்யபிரதா சாகு:
குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கு செப்டம்பர் 7ஆம் தேதி வரை தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
இந்திய ஹாக்கி அணிகள் பதக்கம் வெல்லும்:
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணிகள் பதக்கம் வெல்லும் என்று கேப்டன்கள் மன்பிரீத் சிங், ராணி ராம்பால் ஆகியோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Bright Zoom News ஜுலை 24 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
July 24, 2020
Rating:
No comments: