Bright Zoom Today News
ஜுலை 30 மாலை நேரச் செய்திகள்
ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை... தமிழக முதல்வர் உத்தரவு... - செய்திகள்...!!
உலகச் செய்திகள்
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவிப்பு:
இந்தியா அளவுக்கு அதிகமான வகையில் ஆயுதங்களை வாங்குகின்ற நடவடிக்கை, தெற்காசியாவில் ஆயுத குவிப்பிற்கு வழி வகுக்கும் என ரஃபேல் போர் விமானங்கள் வருகை குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை:
தமிழகத்தில் பொதுமுடக்கத்தை ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும்.
நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உணவகங்கள் 50 சதவீத இருக்கைகளில் வாடிக்கையாளர்களை அனுமதிக்கவும், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் 75 சதவீத பணியாளர்களுடன் இயங்கவும், அனைத்து வித பொருட்களையும் விநியோகிக்க ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஊராட்சி பகுதிகளை தொடர்ந்து, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் சிறிய வழிபாட்டுத் தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே உள்ள இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயமாகும்.
மாநிலங்களுக்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கான தடை தொடரும்.
திரையரங்குகள், ஜிம்கள், நீச்சல் குளங்கள் மற்றும் பூங்காக்கள் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும்.
மெட்ரோ ரயில், மின்சார ரயில்களுக்கான தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி உத்தரவு:
டெல்லியில் டீசல் மீதான வாட் வரியை 30 சதவீதத்தில் இருந்து 16.75 சதவீதமாக குறைத்து அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
பாதுகாப்பு அதிகரிப்பு:
லக்னோவில் வரும் 5ஆம் தேதி ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற உள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாளை அமைச்சரவையில் முடிவு:
புதுச்சேரி மாநிலத்தில் பொதுமுடக்கம் பற்றி நாளை அமைச்சரவையில் முடிவு செய்யப்படும் என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
வரும் நவம்பர் மாதம் வரை:
தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டதை அடுத்து ரேஷன் கடைகளில் வரும் நவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:
வேலூர், கிருஷ்ணகிரி உட்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
500 விக்கெட்டுகள்:
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு, இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Bright Zoom Today News ஜுலை 30 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
July 30, 2020
Rating:
No comments: