Bright Zoom Today News
ஜுலை 30 காலை செய்திகள்
ரேஷன் கடைகளில் இனி இலவச பொருட்கள் கிடையாது... தமிழக அரசு... - செய்திகள்...!!
உலகச் செய்திகள்
அக்டோபர் 15ஆம் தேதி வரை அவசரநிலை:
இத்தாலியில் அக்டோபர் 15ஆம் தேதி வரை அவசரநிலை நீட்டிக்கப்படுவதாக, அந்நாட்டு பிரதமர் கியூசெப் கோண்டே அறிவித்துள்ளார்.
மாநிலச் செய்திகள்
மீண்டும் கட்டணம் வசூல்:
தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் 5 சுங்கச்சாவடிகளில் 126 நாட்களுக்கு பிறகு மீண்டும் கட்டணம் வசூல் தொடங்கப்பட்டுள்ளது.
இலவசப் பொருட்கள் கிடையாது:
ரேஷன் கடைகளில் இனி இலவசப் பொருட்கள் கிடையாது. ஆகஸ்ட் மாதம் முதல் அத்தியாவசிய பொருட்களை பணம் கொடுத்துத் தான் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆகஸ்ட் மாத பொருட்கள் வாங்குவதற்கான டோக்கன் 1, 3, 4 ஆகிய தேதிகளில் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பக்தர்கள் யாரும் வர வேண்டாம்:
ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சியை நேரில் காண அயோத்திக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என ராமர் கோவில் அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு:
தமிழக காவல்துறையில் 18 டிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து தமிழக டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதியில் இருந்து:
ராஜஸ்தான் மாநில சட்டசபை கூட்டத்தை ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதியில் இருந்து நடத்த, அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக விஞ்ஞானிக்கு தேசிய விருது:
பெருங்கடல் தொழில்நுட்பத்திற்காக தமிழக விஞ்ஞானி டாக்டர் ஆத்மானந்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டு உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு:
பொதுமுடக்கத்தில் இருந்து 3ஆம் கட்ட தளர்வுகளையும், கட்டுப்பாடுகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. இருப்பினும் அந்தந்த மாநிலங்களே, பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிப்பது பற்றியும், கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றியும் முடிவெடுக்கலாம் என மத்திய அரசு கூறியுள்ளது.
8ஆம் வகுப்பு வரை தாய்மொழி கட்டாயம்:
8ஆம் வகுப்பு வரை தாய்மொழி கட்டாயம் என்றும், சமஸ்கிருதம் அல்லது ஏதேனும் ஒரு வேற்று மொழியை விருப்பப் பாடமாக கட்டாயம் தேர்வு செய்ய வேண்டும் என்றும் புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
நேற்று முதல் செயல்பாட்டிற்கு வந்தது:
நியாயவிலை கடைகளில் பயோமெட்ரிக் எனப்படும் கைரேகை பதிவு முறை, பெரம்பலூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 61 நியாயவிலை கடைகளில் நேற்று முதல் செயல்பாட்டிற்கு வந்தது.
தி.மு.க. தலைவர் அறிவிப்பு:
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (ஜுலை 30) காணொளி காட்சியின் மூலமாக நடைபெறும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி:
இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று நடக்கவுள்ளது.
வருகின்ற 5ஆம் தேதி தொடங்குகிறது:
இங்கிலாந்து-பாகிஸ்தான் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகின்ற 5ஆம் தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.
Bright Zoom Today News ஜுலை 30 காலை செய்திகள்
Reviewed by Bright Zoom
on
July 30, 2020
Rating:
No comments: