Bright Zoom Today News
செப்டம்பர் 03 மாலை நேரச் செய்திகள்
நாளை முதல் ஆன்லைனில் முன்பதிவு... - முக்கியச் செய்திகள்...!!
உலகச் செய்திகள்
பவள விழா கொண்டாட்டம்:
ஜப்பானை போரில் வென்று 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் சீனாவில் பவள விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது.
சீன வர்த்தக அமைச்சகம் எதிர்ப்பு:
பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை விதித்த இந்தியாவின் நடவடிக்கைக்கு சீன வர்த்தக அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
ஹெலிகாப்டர் சேவை தொடக்கம்:
கேரள மாநிலம் தேக்கடிக்கு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
எழுத்துப்பூர்வ பதில்களை வழங்க முடிவு:
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டாலும், எழுத்துப்பூர்வ பதில்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேவஸ்தானம் ஒப்புதல்:
திருப்பதி ஏழுமலையான் கோவில் கணக்கு மற்றும் சொத்துக்களை தணிக்கை செய்வதற்கு தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு:
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை வரும் திங்கட்கிழமை (செப்டம்பர் 07) முதல் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
உச்சநீதிமன்றம் தெரிவிப்பு:
பல்கலைக்கழகங்கள், இறுதியாண்டுக்கு மட்டுமின்றி பிற மாணவர்களுக்கும் தேர்வுகளை நடத்த விரும்பினால் நடத்தி கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை:
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொளியில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
நிதிக்குழு அறிவிப்பு:
15வது நிதிக்குழுவின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் உறுப்பினர்களுடனான கூட்டம் நாளை நடைபெறும் என நிதிக்குழு அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்றம் உத்தரவு:
ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இ.எம்.ஐ. கட்டாதவர்களின் கணக்குகளை மறு உத்தரவு வரும் வரை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
கனமழைக்கு வாய்ப்பு:
தமிழகத்தில் சேலம் உள்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் ஆன்லைனில் முன்பதிவு:
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு நாளை முதல் ஆன்லைனில் முன்பதிவு தொடங்கவுள்ளது. ஆன்லைன் அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ளாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை என திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை:
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.288 குறைந்து, சவரன் ரூ.39,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விளையாட்டுச் செய்திகள்
இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு:
ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
No comments: