Bright Zoom Today News
அக்டோபர் 10 காலை நேரச் செய்திகள்
இன்று முதல்... ரயில் டிக்கெட் பெற புதிய வசதி - முக்கியச் செய்திகள்..!!
உலகச் செய்திகள்
பாகிஸ்தானிலும் தடை:
இந்தியா, அமெரிக்காவை தொடர்ந்து பாகிஸ்தானும் டிக்டாக் செயலியை பயன்படுத்த தடை விதித்துள்ளது.
இந்தியா முடிவு:
சீனாவுடன் நாளை மறுநாள் நடைபெறும் பேச்சுவார்த்தையின் போது எல்லையில் குவிக்கப்பட்டுள்ள முழு துருப்புகளையும் பின்வாங்குமாறு வலியுறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.
உலகின் மிக மதிப்புமிக்க ஐ.டி நிறுவனம்:
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் நேற்று அசென்ச்சர் (Accenture) நிறுவனத்தை முந்தி, உலகின் மிக மதிப்புமிக்க ஐ.டி நிறுவனமாக மாறியது.
மாநிலச் செய்திகள்
இன்று முதல் தொடங்குகிறது:
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான முதுநிலைப் பட்டப்படிப்பு சேர்க்கை இன்று முதல் தொடங்குகிறது.
மும்பை மாநில அரசு அனுமதி:
மாற்றுத்திறனாளிகள் மற்றும் புற்று நோயாளிகள் மின்சார ரயிலில் பயணம் செய்ய மும்பை மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ரயில் டிக்கெட் பெற புதிய வசதி:
இன்று முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு கூட, பயண டிக்கெட் பெறும் வசதி நடைமுறைக்கு வந்துள்ளது.
இன்று முதல் முன்பதிவு:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் துலாம் மாத பூஜைக்காக பக்தர்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. நாள்தோறும் 250 பக்தர்களை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்:
3 நாட்களுக்கு மழை தொடரும் என்பதால் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருமண பதிவிற்கு சிடி தருவது கட்டாயம்:
முதலமைச்சர் தனிப்பிரிவு புகார் எதிரொலி காரணமாக ஆவண, திருமண பதிவிற்கு சிடி தருவது கட்டாயம் என கூடுதல் ஐஜி அனைத்து சார்பதிவாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டச் செய்திகள்
ரயில் சேவை இப்போதைக்கு தொடங்காது:
குன்னூர்-உதகை இடையேயான மலை ரயில் சேவை இப்போதைக்கு தொடங்காது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தபால்துறை அழைப்பு:
திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில் பொதுமக்கள் சேர தபால்துறை அழைப்பு விடுத்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலிடம்:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஐ.பி.எல் டி20 லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
உலக கோப்பை கால்பந்து போட்டி:
உலக கோப்பை கால்பந்து போட்டி 2022ஆம் ஆண்டு கத்தாரில் நடக்கவுள்ளது.
No comments: