Bright Zoom Today News
அக்டோபர் 09 காலை நேரச் செய்திகள்
ரேஷன் பொருட்கள் விநியோகம் தடைபடக்கூடாது.. தமிழக அரசு உத்தரவு - முக்கியச் செய்திகள்..!!
உலகச் செய்திகள்
நாளை முதல் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்:
அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை முதல் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம் என வெள்ளை மாளிகை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
உலக வர்த்தக அமைப்பின் புதிய தலைவர்... முதல் முறையாக:
உலக வர்த்தக அமைப்பின் புதிய தலைவராக முதல் முறையாக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இந்த அமைப்பின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான இறுதிச் சுற்றுக்கு 2 பெண்கள் தேர்வாகி உள்ளனர்.
மாநிலச் செய்திகள்
நாடு முழுவதும் வரும் 15ஆம் தேதி முதல்:
நாடு முழுவதும் வரும் 15ஆம் தேதி முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களுக்கு வயது வரம்பு உயர்வு:
அரசு பணி நியமனத்தில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு வயது வரம்பை 30ல் இருந்து 32 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு உத்தரவு:
கைவிரல் ரேகையை அங்கீகரிக்க முடியவில்லை என்ற காரணத்திற்காக யாருக்கும், ரேஷன் பொருட்கள் வழங்காமல் இருந்துவிடக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசியல் பொதுக்கூட்டங்களை நடத்திக்கொள்ள அனுமதி:
அரசியல் பொதுக்கூட்டங்களை நடத்திக்கொள்ள பொதுமுடக்க கட்டுப்பாடுகளில், மேலும் சில தளர்வுகளுடன் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழ் மொழிக்கு அனுமதி:
மத்திய தொல்லியல் துறை பட்டயப்படிப்பில் சேர தகுதியாக தமிழ்மொழியையும் சேர்த்துள்ளதாக மத்திய தொல்லியல்துறை இணை இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், கன்னடம், மலையாளம், ஒடிஷா உள்ளிட்ட 10 மொழிகளுக்கு அனுமதி வழங்கி புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளை தற்போதைக்கு திறக்கும் திட்டம் இல்லை:
கர்நாடகத்தில் பள்ளிகளை தற்போதைக்கு திறக்கும் திட்டம் இல்லை என்று அம்மாநில முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
8,000 பக்தர்களுக்கு அனுமதி:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவையொட்டி, சாமி தரிசனம் செய்ய தினமும் 8,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
ஐதராபாத் அணி வெற்றி:
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அணி 3-வது வெற்றியை பெற்றது.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி:
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் மற்றும் அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்கள்.
தேசிய பயிற்சி முகாம்:
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர், வீராங்கனைகளுக்கான தேசிய பயிற்சி முகாம் டெல்லியில் உள்ள கர்னிசிங் துப்பாக்கி சுடுதல் ரேஞ்சில் வருகின்ற 15ஆம் தேதி முதல் டிசம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும் என்று இந்திய விளையாட்டு ஆணையம் நேற்று அறிவித்தது.
No comments: